Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

76 ரூபாய் தந்தால் புழுங்கல் அரிசி.. ரூ.70-க்கு பச்சரிசி.. தமிழகத்தில் அரிசி விலை உயர்வு.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாகவே குறைந்திருந்த அரிசியின் விலை, தற்போது திடீரென அதிகரித்து காணப்படுகிறது.. இந்த அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? இந்த விலை குறைப்பு குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சொல்வதென்ன?

தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை விடுத்திருந்தார்.

Rice price tamil nadu Central Government

கூடுதல் அரிசி: இது தொடர்பாக அளித்திருந்த மனுவில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியை தவிர்த்து, பொது விநியோக திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மாதந்தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி தேவைப்படுகிறது.

ஜூலை மாதம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், அந்த அரிசி கிலோ ரூ.28 க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த அரிசியை ஏற்கனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20க்கே வழங்க வேண்டும்... 2,756 டன் கேழ்வரகை மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்து வருவதால், மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை சராசரியாக தேவைப்படுகிறது. இதனை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மானிய விவரங்கள்: இந்த மனுவிலுள்ள கோரிக்கைகளை மத்திய அரசின் அதிகாரிகளிடம் ஆலோசித்த மத்திய அமைச்சா், மானிய விவரங்களை ஒத்திசைவு செய்து விரைவில் விடுவிப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. ஆனால், கோதுமை விளைச்சல் ஒரே சீராக இருப்பதால் ஒதுக்கீட்டைக் கூட்டுவதில் சிரமம் உள்ளதாகவும், இருந்தாலும் இதை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சா் உறுதியளித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.. நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது, அதிகரிக்கும் உற்பத்தி செலவு, வேலையாட்களின் சம்பள உயர்வு, மின் கட்டண உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற பல்வேறு காரணங்களினால், அரிசி விலை உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில், ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரையும், பச்சரிசி ஒரு கிலோ ரூ.70 வரையும் விற்கப்படுகிறது.. அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொறுத்து விலை மாறுபடுகிறது என்றாலும், சில குறிப்பிட்ட பிராண்ட்கள் விலைகள் எப்போதுமே ரூ.70-க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.. இந்த விலை, இனிவரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள் அரிசி வியாபாரிகள்.

என்ன காரணம்:
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் - அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன தலைவர் டி.துளசிங்கம், பொது செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் சொன்னதாவது:

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், கடந்த வருடம் ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசி விலை உயர்ந்திருந்த நிலையில், இதற்கு பிறகுதான் வணிகர்களின் வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு 20 சதவீத சுங்கவரி விதித்ததால் ஏற்றுமதி குறைந்து அரிசி விலை சீரானது... எனினும், ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தற்போது வலியுறுத்தி வருகிறோம்.

அரிசி விலை : தவிர, அரிசி ஆலைகளில் வேலை செய்ய, வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது.. கரண்ட் பில் உயர்வால் 1,800 அரிசி ஆலைகளின் உற்பத்தி செலவும் அதிகமாகிறது. அரிசியின் மொத்த விலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவினங்களால் அரிசியின் சில்லறை விலையில்தான் மாற்றம் வருகிறது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+