ஜெயன் மறைவு! பூட்டாத பூட்டுக்கள் படம் தோல்வி! சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட பிரபல நடிகரின் மாமியார்
சென்னை: பூட்டாத பூட்டுக்கள் என்ற திரைப்படம் தோல்வி அடைந்தததால் பிரபல நடிகரின் மாமியார் சினிமாவிலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டார். இந்த கதை தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஜெயன்...ரஜினி...மகேந்திரன்....

'பூட்டாத பூட்டுக்கள்' எடுக்கும் நேரத்தில் ரஜினி மகேந்திரனோட நல்ல நண்பர். அப்படி முடிவெடுத்து ரஜினி இதில் நடிக்க ஆயத்தமாகும் போது அவர் ஒரு கமர்ஷியல் நாயகனாக மாறி இருந்தார். அதனால் ரஜினியே இந்தப் படத்திலிருந்து விலகி இருக்கலாம்.
ஜெயன் - ரஜினி காம்போ நடக்கவில்லை. ஆனா ஜெயனும், ரஜினியும் ஒரே கதைகளில் நடிக்க இருந்தார்கள். தீவார் படத்தை ஜெயனை வைத்து மலையாளத்தில் எடுக்க இருந்தார் பாலாஜி. ஆனால் ஜெயன் 80 நவம்பரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறக்க ரஜினி நடிக்க தமிழில் தொடங்கினார் பாலாஜி. ரஜினி நடித்த 'தப்புத்தாளங்கள்' படத்தை மலையாளத்தில் ஜெயன் 'கழுகன்' என்கிற பெயரில் ரீமேக் செய்தனர்.
தப்புத்தாளங்கள் படத்தில் வில்லனான சுந்தர்ராஜ் 'பூட்டாத பூட்டுக்கள்' படத்தில் ரஜினியின் பாத்திரத்தில் நடித்தார். ஹேம்நாக் சகோதரர்கள் ரஜினி நடிக்க கர்ஜனை என்று தமிழிலும், கன்னடத்தில் ரஜினி நடிக்க கர்ஜ்ஜனா எனவும், மலையாளத்தில் ஜெயன் நடிக்க கர்ஜ்ஜனம் எனவும் தொடங்கினார்கள்.
ஜெயன் மற்றும் சாருலதா என்கிற ஜெயந்தி (சாந்தனுவின் மாமியார் ஜெயந்தி) நடிக்க ஒரு சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டது. அதோடு ஜெயன் தவறிப்போக ரஜினியே மூன்று மொழியிலும் நடிக்க முடிவானது. ஜெயன் இறந்த போது அவரது நான்கு படங்கள் முடியும் தருவாயில் இருந்தன. எல்லாப் படங்களிலும் டப்பிங் பாக்கி இருந்தது. ஜெயனின் மலையாள உச்சரிப்பு தனி ஸ்டைல். யார் மலையாளம் பேசினாலும் ஒரு பெண் தன்மை பேச்சில் வெளிப்படும்.
ஆனால் ஜெயனின் உச்சரிப்பு கம்பீரமாக வெண்கலக் குரலில் இருக்கும். அதனால் பலர் டப்பிங் பேசி ஒன்றும் சரியாக வில்லை. கடைசியாக ஆலப்புழாவைச் சேர்ந்த பலகுரல் மன்னன் அஸ்ரப் என்பவரை அழைத்துப் பேச வைத்தனர். அஸ்ரப் மேடைகளில் ஜெயனைப் போலவே பேசி கை தட்டல் வாங்குபவர். மேலும் புகழ்வாய்ந்த நடிகர் பி.ஜே.ஆண்டனி இறந்த போது அவருக்காக டப்பிங் பேசி படத்தை முடித்துக் கொடுத்தவர் அஸ்ரப்.
அஸ்ரப்பை வரவழைத்து ஜெயனைப்போல பேச வைத்து யாரிடமும் டப்பிங் பேசியதை சொல்லக் கூடாது என வாக்குறுதி வாங்கிக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்தனர். படம் வெளியாகி படு ஹிட். யாருமே இது ஜெயன் பேசியது அல்ல எனக் கண்டு பிடிக்கவில்லை. அப்படி நான்கு படங்களில் அஸ்ரப் ஜெயனுக்காக பேசினார். பல வருடங்களாக யாருக்குமே தெரியாதிருந்ததை பின்னாளில் அந்த டைரக்டரே உடைத்து வெளிப்படுத்திய போது தான் ரசிகர்களுக்கு தெரிந்தது ஜெயன் அல்ல என்று.
ரஜினி மூன்று மொழிகளில் நடித்தாலும் கன்னடம், தமிழில் ரஜினியே டப்பிங் பேசினார். தெலுங்கில் ஒருவரும், மலையாளத்தில் ஒருவரும் பேசி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மலையாள வெர்ஷனைப் பார்த்த ரஜினி இந்தக்குரல் எனது பேச்சுக்கு சேரவில்லை எனப் போர்க் கொடி தூக்க தயாரிப்பாளர்கள் கையை பிசைந்தார்கள். காரணம் படம் முழு பதிவும் முடிந்து ரீல் தயாராகி விட்டது.
இனி புதிதாக குரலை மாற்ற வேண்டுமென்றால் ரீரெக்கார்டிங் அனைத்தையும் பிரித்து முழுதும் திரும்பச் செய்ய வேண்டும். பலரும் இரண்டாவதாக டப்பிங் பேசியும் ரஜினி ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் ஜெயனுக்குப் பேசிய அதே அஸ்ரப்பை அழைத்தார்கள். அவருக்கு விமான டிக்கெட் கிடைத்ததும் நேரே சென்னை வந்தார். டப்பிங் ரூமில் ரஜினிக்கு முன்பாக பேச வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அவரும் ரஜினியின் வேகமான உதட்டசைவுக்கு மலையாள வசனங்களைப் பேச ரஜினி எழுந்து வந்து அஸ்ரப்புக்கு கை கொடுத்தார்.
வாய்ஸ் ஓகே. கர்ஜ்ஜனம் மலையாளப் படத்தில் ரஜினிக்கு அஸ்ரப் பேசி படம் வெளியானது. ஆனால் கர்ஜனை தோல்வியடைந்தது. கர்ஜ்ஜனம் படமும் ஜெயன் படத்தில் ரஜினி என எதிர்பார்த்து மலையாளிகள் தோல்வியை தந்ததாக செய்தி. சி.வி.ராஜேந்திரன் எடுத்த மும்மொழிப்படம் ஏனோ க்ளிக்காகவில்லை. சாருலதா என்கிற ஜெயந்தி மாஸ்டர் ஜெயனோடு ஜோடி சேர்ந்து ஜெயன் இறந்ததாலோ என்னவோ சென்டிமெண்ட்டாக ஒதுக்கி வைக்கப்பட்டார்.
அவர் நடித்த தமிழ்ப் படங்கள் பூட்டாத பூட்டுக்கள் படத்தின் படு தோல்வியில் அவரை ஒதுக்கி வைத்தது. கர்ஜனையில் ஜெயனுக்கு நாயகியாக உள்ளே வந்து ரஜினியோடு 'ஒரு ஊரில் ஒரு மகராணி' பாடலில் மட்டும் நடித்து வெளியேற வேண்டி வந்தது.
இந்த தோல்வி முகங்களுக்கு நடுவே ஒரு வெற்றி முகம் இருந்தது. அது அந்த மிமிக்ரிக்காரர் அஸ்ரப். அஸ்ரப் பின்னாளில் உதவி இயக்குனராகி சொந்தமாக படம் தயாரித்து பின் இயக்குனரானார்.
இரட்டை இயக்குனர்கள் சித்திக்-லால் படமான 'இன் ஹரிஹர் நகர்' படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நகரில் என்கிற பெயரில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க இயக்கினார். மோகன்லாலை வைத்து 'நின்னிஷ்டம் என்னிஷ்டம்' படத்தை இயக்கி அதை தமிழில் பாண்டியராஜனை வைத்து 'நீலக்குயில்' என்கிற படமாக இயக்கினார். வருஷம்-16 படத்தை தமிழ்நாட்டில் விநியோகித்து காசை அள்ளியதும் அவர் தான்.... இவ்வாறு செல்வன் அன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications