Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது வருங்கால வைப்பு நிதி.. ரூ.500 போதும்! லட்சக்கணக்கில் பணம் அள்ளலாம்! மத்திய அரசு சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பும், நம்பிக்கையும் தரும் public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

பொதுமக்கள், தங்களின் உறுதியான பாதுகாப்புக்காகவும், வளமான எதிர்காலத்துக்காகவும், சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கேற்ற வகையில், அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Central Government Savings Scheme

சேமிப்பு கணக்கு: வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும், முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு நன்மையை தரக்கூடியது. அதனால்தான், தபால்நிலைய வங்கி சேமிப்புகள் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றுவருகின்றன.

அந்தவகையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்து பார்ப்போம்.. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளதே தவிர, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது.

ஓய்வூதியம்: எனவே, அரசு மற்றும் நிறுவனங்கள் சாராத மக்களுக்கும், எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்படுத்தப்படுவதுதான் இந்த public provident fund என்று சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். PPF என்று இதனை சொல்வார்கள்.

இந்த திட்டத்தில், சுய தொழில் செய்வோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் வராதவர்கள் என யாரும் இணையலாம்.. இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம் என்பதால், எதிர்காலத்தில் நிறைய லாபத்தை பெறமுடியும்..

வருமானவரி சேமிப்பு: இதில், வருமான வரி சேமிப்பு வசதிகள், கடன் வசதிகள் போன்றவையும் அடங்கியிருப்பதால், பொதுமக்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறது. அத்துடன் சிறு சேமிப்பு திட்டத்தைவிட, இதில் வட்டி வருமானம் அதிகம் என்பதால் கூடுதல் கவனத்தை பொதுமக்களிடம் பெற்றுவருகிறது இந்த பிபிஎப் திட்டம். அதுமட்டுமல்ல, இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டம் என்பதால் முதலீட்டாளர்களுக்கு பெருத்த வழங்குகிறது.

முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 வருடங்கள் கால அளவு என்பதால், அதற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது.. 15 வருடம் கழித்தே மொத்த பணத்தையும் எடுக்க முடியும்.. ஆனால், நம்முடைய சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும். இதற்கு 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

வட்டி விகிதம்: இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 7.1 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். பிறகு முழுத்தொகையும் வட்டியுடன் திருப்பி எடுக்கலாம்

ஓய்வூதியத்துக்கான திட்டம் என்பதால், இளமையிலேயே இதில் இணைந்துவிட்டால், வயதான காலத்தில் பெரும்பலனை அடைய முடியும்.. 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்த PPF கணக்கை துவங்கலாம்.. தபால் நிலையங்களில் பிபிஎப் கணக்கு தொடங்கலாம்... அதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் கணக்கு தொடங்கலாம்.

எப்படி தொடங்குவது: இந்த கணக்கை துவங்க வேண்டுமென்றால், நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதலீடு செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 மட்டுமே அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும் என்றாலும் இதற்கு 12 தவணை முறைகளும் உண்டு.. முதிர்வு காலத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு, இந்த திட்டத்தை நீட்டிக்க முடியும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+