வானத்தில் சாகசம்.. மண்ணில் சோகம்.. மெரினாவில் இவ்வளவு பெரிய அவலம் ஏற்பட.. 10 முக்கியமான காரணம்
சென்னை: சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி வெற்றிபெற்றாலும்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த நிகழ்ச்சியில் யாரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு மரணம் அடையவில்லை. நிகழ்ச்சி உள்ளே விபத்து ஏற்பட்டு யாரும் மரணம் அடையவில்லை. மாறாக நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்பிய போது அல்லது திரும்ப முயன்ற போது மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த கொடூர நிகழ்விற்கு பின் 10 முக்கியமான காரணங்கள் உள்ளன.
1. முதல் விஷயம்.. 13- 15 லட்சம் கூட்டம் என்பது எதிர்பார்க்காதது. இதை திட்ட ரீதியாக எதிர்பார்த்து இருந்தாலும் கூட .. களத்தில் 15 லட்சம் பேரை சமாளிக்க போதிய திட்டமிடல் இல்லாமல் போய்விட்டது.

2. உதாரணமாக அண்ணா சாலையை மெரினாவில் காமராஜர் சாலையுடன் இணைக்கப்படும் எந்த சாலையிலும் பிற்பகல் நேரத்தில் போலீசார் அதிகமாக இல்லை. வாலாஜா தெரு தொடங்கி.. அண்ணா சாலை - காமராஜர் சாலையை இணைக்கும் கிளை சாலை எதிலும் அதிக அளவில் போலீசார் இல்லை.
3. இதற்கு காரணம் பெரும்பாலான போலீசார் மெரீனாவிலேயே பாதுகாப்பில் இருந்துவிட்டனர். நிகழ்ச்சி முடிந்த உடனே மக்கள் தியேட்டரில் படம் முடிந்து வெளியேறும் மக்கள் போல வெளியேற தொடங்கிவிட்டனர். சிலர் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேற செல்ல தொடங்கிவிட்டனர். எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும்.. ஏற்பாடு இருந்தாலும் ஒரே நேரத்தில் இவ்வளவு கூட்டம் ஒன்றாக வெளியேறினால்.. எதையும் சமாளிக்க முடியாது.
4. மக்கள் 5 பேர் இறக்க காரணம்.. கடுமையான வெயில்.. நீர் இழப்பு.. அதனால் ஏற்பட்ட.. ஹீட் ஸ்ட்ரோக். இது ஏற்பட காரணம்.. மீறினால் தண்ணீர் பந்தல் இல்லை. கடைகளில் மட்டுமே தண்ணீர் காசுக்கு வாங்க வேண்டும். அதற்கும் லைனில் நிற்க வேண்டும். சாதாரண ஏப்ரல் வெயிலுக்கு மோர் பந்தல் வைக்கும் நாம்.. இந்த மெரினா நிகழ்வில் தண்ணீர் வைக்கவில்லை.
5. சென்னையில் நிலவும் கடுமையான வெயில்தான் அனைத்திற்கும் காரணம். நேற்று மெரினாவில் கிட்டத்தட்ட 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. கடுமையான வெயில் காரணமாக பலருக்கும்.. கடுமையான நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நீர் இழப்பு காரணமாக மக்கள் அங்கே கடுமையாக துடித்து உள்ளனர்.
6. சிக்கலே ஒருமுறை உள்ளே சென்றால் வெளியே வருவது சிக்கல். அண்ணா சிலையில் இருந்தோ.. மெரினாவில் மற்ற பகுதியில் இருந்தோ அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் நடந்தே செல்ல வேண்டும். இதில் இன்னொரு சிக்கல்.. இதற்கு குறைந்தது 1 மணி நேரம் ஆகும். கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டத்தில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டும்.
7. உள்ளே சிக்னல் இல்லை. இதனால் மக்கள் காத்திருக்க விரும்பாமல் ஒரே நேரத்தில் கிளம்பியது பெரிய தவறு. அதோடு சில சாலைகளில் கார்களை உள்ளே விட்டதால்.. அங்கே மக்களும் வெளியேற முடியவில்லை. காரும் வெளியேற முடியவில்லை. கார் வாகனங்கள் டிராபிக்கில் செல்வது போல நடந்து செல்லும் போது கூட ஊர்ந்து செல்லும் அளவிற்கு அங்கே கூட்டம் நிலவியது.
8. நேற்று இன்னொரு பெரிய ஷாக்.. காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகளில் உள்ள கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தது. டீ கடைகள் கூட திறக்கப்படவில்லை. இதனால் பலர் நீர் இழப்பு காரணமாக கடுமையாக சிரமப்பட்டனர்.
9. கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டதே சிக்கல். இத்தனை பேர் இங்கே ஒரே இடத்தில் கூடி இருந்ததால்.. மக்கள் வெளியே செல்வது சிக்கலாக இருந்தது. இந்த நெரிசல் காரணம்.. பலருக்கும் மூச்சு திணறல், படபடப்பு, கடும் நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது . பலருக்கும் அங்கே நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டாலும் கூட அவர்களை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. அங்கு டிராபிக் மோசமாக இருந்ததால் உடனடியாக யாரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை .
10. அங்கேயே தற்காலிக மருத்துவ சேவை மையம் இருந்தது. ஆனால் அங்கே அவசர சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளை செய்ய முடியாது. இதனால் மோசமான நிலையில் இருந்தவர்களை அங்கே இருந்து வெளியே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதுவே மரணத்திற்கும் காரணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications