விவசாயிகள் மகிழ்ச்சி.. 10 லட்சம் வரை கடனுதவி தரும் சூப்பர் திட்டம் கிசான் ட்ரோன்.. மத்திய அரசு சபாஷ்
சென்னை: விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது.. அந்தவகையில் விவசாய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம் கிசான் ட்ரோன் திட்டம். இந்த திட்டத்தின் பயன்கள் என்னென்ன தெரியுமா?
மத்திய அரசை பொறுத்தவரை, விவசாயிகளின் நலன்களில் தீவிர கவனத்தையும், அக்கறையையும் செலுத்தி வருகிறது.. விவசாயிகளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காகவும், ஏகப்பட்ட சலுகைகளையும், நலத்திட்டங்களையும், கடனுதவியையும் தந்து வருகிறது.

பிஎம் கிசான்: அதில் ஒன்றுதான் பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமாகும்.. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இதற்கு மற்றொரு பெயரும் உண்டு.
பி.எம். கிசான் திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.
விவசாயிகள்: அதேபோல, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனை துவங்கியிருக்கிறது.. பாரத் கோதுமையை போலவே, பாரத் அரிசியையும், அறிமுகப்படுத்தியிருக்கிறது..
விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இன்னொரு திட்டம்தான், கிசான் ட்ரோன் திட்டமாகும். இதன்மூலம், ட்ரோன்கள் மூலம் வேளாண் நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படும். வேளாண்மையை 2ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்துடன் இணைத்து விவசாயிகளின் வாழ்வு மேம்படும் விதமாக இந்த ட்ரோன் திட்டத்தை மத்திய அரசு கடன் 2022ம் ஆண்டு முதல் தொடங்கியிருக்கிறது.. இந்த திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தார்.
பிரதமர்: இந்த திட்டம் தொடங்கப்பட்டதுமே பிரதமர் மோடி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.. அதில், நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. இது துடிப்புமிக்க புதிய தொழிலின் @garuda_india மெச்சத்தக்க முன்முயற்சியாகும். புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதுடன் வேளாண்மையை மிகவும் லாபகரமானதாக மாற்றும்." என்று பூரித்து கூறியிருந்தார்.
அந்தவகையில், விவசாய துறையில் ட்ரோன்களின் பங்களிப்பு இப்போதும் அதிகரித்து வருகிறது. விவசாய பயன்பாட்டுக்கான ட்ரோன்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, வெளிநாட்டிலிருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து, உள்நாட்டு ட்ரோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
ட்ரோன்கள்: இந்த திட்டத்திற்கு முதல் முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி திட்டத்தையும் அறிவித்திருக்கிறது..
கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
கடனுதவி: பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளித்தல் போன்ற வேலைகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான ட்ரோன் பயன்பாட்டுத் திட்டம் குறித்து மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதுபற்றி ஒருமுறை சொல்லும்போது, வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து, ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயப் பணிகளில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்ணைகள்: அந்தவகையில், காய்கறிகள், பழங்கள், மீன்கள் ஆகியவற்றை பண்ணைகளில் இருந்து நேரடியாக சந்தைக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்பதால் கிசான் ட்ரோன் ஒரு புதிய விளிம்பு புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது..
இதனால் விவசாய பொருட்கள் நேரடியாக சந்தைக்கு குறைந்த சேதத்துடன் வழங்கப்படும்.. அத்துடன் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதால், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க நிறையவே வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications