விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அசத்தும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா! பிஎம் கிசான் திட்டத்தில் ஹைலைட்ஸ்
சென்னை: மத்திய அரசின் கிசான் ரின் போர்ட்டல் என்றால் என்ன? கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
நம்முடைய நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதால்தான், விவசாயிகளின் நலன்களில் எப்போதுமே மத்திய அரசு தீவிர கவனத்தையும், அக்கறையையும் செலுத்தி வருகிறது... அவர்களின் நலனுக்காகவே, பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும், கடனுதவியையும் தந்து வருகிறது.

விவசாயிகள்: விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையை துவங்கியிருக்கிறது.. பாரத் கோதுமையை போலவே, பாரத் அரிசியையும், அறிமுகப்படுத்தியிருக்கிறது..
அதுபோலவே, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் விவசாயக் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகம் 3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டமானது வங்கிகளின் வளங்களை பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு 2 சதவீத வட்டி மானியத்தை வழங்குகிறது.
யோஜனா திட்டம்: பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கியமான திட்டமாகும்.. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இதற்கு இன்னொரு மற்றொரு பெயர் உண்டு.
பி.எம். கிசான் திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.
விவசாயிகள் நலன்: இந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாக திகழ்கிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்டது.. 'வழக்கமாக, பிரதமர் கிசான் நிதி 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.. அதாவது பிப்ரவரியில் இருந்து பார்த்தால் வரும் ஜூன் மாதத்தில் 17வது தவணை வெளியாக வேண்டும். ஆனால் கடந்த மாதம் தேர்தல் விதிமுறைகள் காரணமாக பி.எம்.கிசான் தவணை செலுத்துவது தாமதமானது. இப்போது, புதிய அரசு அமைந்துள்ள நிலையில், 17வது தவணை விரைவில் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது: அந்தவகையில், பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் 17 வது தவணை ஜூன் முதல் ஜூலை 2024ல் வெளியிடப்படும் என்று தகவல்கள் கசிகின்றன.. அதேசமயம், சரியான தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்திய பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்றதுடன், தன்னுடைய முதல் கையெழுத்தை விவசாயிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டிருந்தார்.. பிரதமரின் முதல் கையெழுத்து மூலம் விவசாயிகளுக்கான நிதியாக ரூ.20 ஆயிரம் கோடி விடுவிக்கப்படும். இதன் மூலம் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் எப்படியும் அடுத்த சில தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி சேரலாம்: இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைய, நிலத்தின் உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும்.. ஒருவேளை, மற்றவர்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அந்த நிலம் அவரது பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரிலோ, அல்லது அவரது தாத்தாவின் பெயரிலோ இருந்தால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆன்லைன் எப்படி விண்ணப்பிக்கலாம்
- https://pmkisan.gov.in/. என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, "உழவர் மூலைக்கு" (Farmers Corner) சென்று "புதிய உழவர் பதிவு" (New Farmer Registration) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஸ்கிரீனில் இப்போது Aadhaar No , Image Code உள்ளிட்டவற்றை பதிவிட்டு, "தொடர இங்கே கிளிக் செய்க" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
- Registration Form என்ற ஆப்ஷனில், உங்கள் மாநிலம் (State), மாவட்டம், கிராமம், தொகுதி, துணை மாவட்டம், பாலினம், பெயர், வகை, ஐடி, ஐஎஃப்எஸ்சி குறியீடு, கணக்கு எண், வங்கி பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, தாய் / தந்தை / கணவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்களை வழங்க வேண்டும்
- விவசாய நிலத்தின் தகவல்களையும் வழங்கி, கணக்கெடுப்பு அல்லது கணக்கு எண், தட்டம்மை எண், பரப்பளவு போன்றவற்றையும் பதிவு செய்து இறுதியில், "சேமி" (Save) என்பதை கிளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications