செம நியூஸ்! கோவை டூ பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்! இத்தனை நன்மைகளா? டிக்கெட் எவ்வளவு?
சென்னை: கோவை டூ பெங்களூர் இடையே அடுத்த சில வாரங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களால் இத்தனை பயன்களா?
இந்தியா முழுவதும் 34 வழித்தடங்களில் வந்தே பாரத் எனும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 50ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் 4500 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த சில வாரங்களில் இரு தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒன்று கோவை- பெங்களூர், மற்றொன்று மங்களூர் டூ கோவா ஆகும். இதில் அனைவராலும் உற்று நோக்கப்படுவது கோவை டூ பெங்களூர் வழித்தடம் ஆகும்.
ஏற்கெனவே தமிழகத்தில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் டூ மைசூர், சென்னை எழும்பூர் டூ நெல்லை, சென்னை சென்ட்ரல் டூ கோட்டயம் ஆகியவை ஆகும். இந்த நிலையில் தொழில்நகரமான கோவைக்கு இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிடைக்க போகிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற போகிறது.
அடுத்த சில வாரங்களில் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் இயக்கப்படும். இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் பொருளாதார ரீதியில் என்னென்ன பயன்கள் இருக்கின்றன தெரியுமா? இந்த ரயிலால் பயண நேரம் குறையும். அதாவது கோவை டூ பெங்களூருக்கு சாதாரண ரயில்களில் செல்ல ஆறரை மணி நேரம் டூ 7 மணி நேரம் ஆகும்.
ஆனால் வந்தே பாரத் இயக்கப்பட்டால் கோவையிலிருந்து 5 மணி நேரத்தில் பெங்களூர் சென்றுவிடலாம். வர்த்தக ரீதியில் இந்த ரயில் மிகுந்த பயன்களை அளிக்கும். கோவை என்பது ஜவுளி நகரம் என சொல்லலாம். கோவைக்கு அருகே உள்ள திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிறைய ஜவுளி தொழிற்சாலைகள் உள்ளன.
அது மட்டுமல்லாமல் டிசிஎஸ், சிடிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களும் இங்கு இருக்கின்றன. இதனால் ஐடி துறையும் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து ஐடி வேலைவாய்ப்புகளை கொடுக்கும் நகரம் என கோவையை சொல்லலாம். அது போல் பெங்களூர் என்பதும் ஐடி நிறுவனங்கள் கொண்ட மாநகரமாகும்.
இங்கு எலக்ட்ரானிக் சிட்டி ஐடி நிறுவனங்களின் மையமாக திகழ்கிறது. போக்குவரத்துதான் ஒரு நகரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். அந்த வகையில் இது போன்று இரு நகரங்களிடையே போக்குவரத்தானது முதலீடுகளை ஈர்க்க உதவும். இதனால் தொழிற்சாலைகள் பெருகி வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதனால் மூலம் தமிழகத்தின் கோவை பொருளாதார வளர்ச்சி அடையும்.
இந்த இரு நகரங்கள் மட்டுமல்லாமல் இதனை சுற்றியுள்ள மற்ற நகரங்களுக்கும் பயனளிக்கும். இந்த வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளை கொண்டுள்ளது. 7 ஏசி சேர் கார், ஒரு எக்ஸிகூட்டிவ் சேர் கார் ஆகும். இதுதான் சுழலும் நாற்காலியை கொண்டுள்ளது. சேர் காரில் 1300 ரூபாயும், எக்ஸிகூட்டிவ் சேர் காரில் ரூ 2300 ம் கட்டணமாக இருக்கலாம் என்கிறார்கள். இரு நகரங்களுக்கும் இடையே 363 கிலோமீட்டர் தூரம் உள்ள நிலையில் கட்டணம் குறித்து தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
தற்போது பெங்களூரிலிருந்து தார்வாத், பெலகாவி, ஹுப்பாளி, சென்னை, மைசூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது.












Click it and Unblock the Notifications