ரூ.55000 வங்கி கணக்கில் வரும்! கொத்தாக வந்த குட் நியூஸ்! அடுத்தடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: 2024ம் ஆண்டில் தமிழக அரசு பல முக்கியமான திட்டங்களை அறிவித்து உள்ளது. 2025ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் 2024ல் அறிமுகம் செய்யப்பட்ட நிதி உதவி தொடர்பான திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் போலவே இந்த வருடம் சில முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்த திட்டங்கள் என்னென்ன.. அதன் மூலம் பயன்பெறுபவர்கள் யார் யார் என்று இங்கே பார்க்கலாம். இந்த திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து இங்கே பார்க்கலாம்.

பெண்களுக்கு ரூ. 50000 நிதி: பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டத்திற்கு இடையே இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ. 50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதியவர்களுக்கான திட்டம்: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000/- உதவித் தொகை என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன. 01,01,2024 அன்று 58 அகவை நிறைவடைந்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்கான சான்று இருக்க வேண்டும் . தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு இருக்க வேண்டும். தமிழ்ப் பணிக்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
சான்றட்டை (ஆதார் கார்டு), குடும்ப அட்டை, மரபுரிமையர் அதாவது விண்ணப்பதாரர்களின் மனைவி/கணவன் இருப்பின் அவர்கள் சான்றட்டை (ஆதார் கார்டு) இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறை இணையத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்/உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31,10,2024-க்குள் அளிக்க வேண்டும்.
தமிழ் புதல்வன் திட்டம்: தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த வருடம்தான் தொடங்கப்பட்டது . வங்கி கணக்கில் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் தொடங்கப்பட்டது.அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதுபோல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை இந்த வருடம் ஆகஸ்ட் 9-ஆம் நாள் அறிமுகம் செய்தனர்.












Click it and Unblock the Notifications