அரசு பஸ் விவகாரம்.. பாஜக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கைதானது ஏன்? எத்தனை பிரிவுகளில் வழக்கு தெரியுமா?
சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறங்கும்படி தாக்கியதாக வீடியோ பரவிய நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை குன்றத்தூரில் இருந்து நேற்று போரூருக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. படிக்கட்டுகளில் ஏராளமானவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

குறிப்பாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வேளையில் அங்கு ஒரு பெண் சென்றார். அவர் அரசு பஸ்சை திடீரென்று வழிமறித்து மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்வதை தடுக்க தவறியதாக டிரைவர், கண்டக்டரை விமர்சனம் செய்தார். அதோடு பஸ்சில் தொங்கியபடி சென்றவர்களை செருப்பால் அடித்திருக்கலாமே என சக பயணிகளிடம் அவர் கோரிக்கை வைத்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
அதோடு பஸ்சின் பின்படிக்கட்டுக்கு சென்ற அவர் படியில் இருந்த மாணவர்களை ‛‛இறங்குடா.. இறங்குடா நாயே'' என கூறினார். மேலும் மாணவர்களை அவர் அடித்து வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கியதோடு, ‛‛படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கிறீர்களே.. உங்களுக்கு அறிவு இல்லையா'' என கடும் வார்த்தைகளை பயன்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது.
இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. அதாவது படியில் பயணித்த மாணவர்களை பாதுகாக்க அவர் இப்படி செய்திருந்தாலும் கூட அவர் பயன்படுத்திய வார்த்தை மற்றும் மாணவர்கைள அடித்தது தவறு என பலரும் கூறினர். மேலும் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யார்? என விசாரித்த போது தான் அவர் பாஜகவை சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது.
இவர் பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக இருப்பதும், சின்னத்திரை தொடர் மற்றும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக பஸ் கண்டக்டர் சார்பில் மாங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று கெருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்ற போலீசார் ரஞ்சனா நாச்சியாரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வேளையில் அவர் அரெஸ்ட் வாரண்ட், எப்ஐஆர் இருக்கிறதா? எனக்கேட்டு போலீசாரிடம் கேட்டார். இருப்பினும் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் அவர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை ஆபாசமாக திட்டுதல், அரசு பஸ்சை மறித்தல், தாக்குதல் நடத்தியது உள்பட 5 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்












Click it and Unblock the Notifications