கவிஞர் கண்ணதாசன் மகன் என்பதை தாண்டி.. தமிழக பாஜகவில் இணைந்த அண்ணாதுரை யார் தெரியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு அக்கட்சியில் இணைந்த கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் யார் தெரியுமா?
தமிழக பாஜகவில் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாஜகவில் இணைந்தார். இவருடைய தந்தை கண்ணதாசன், திமுகவில் இருந்ததால் தனது மகனுக்கு அண்ணாதுரை என பெயரிட்டார்.
இந்த நிலையில் அண்ணாதுரை யார் தெரியுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அவர் விவேக்குடன் பல காமெடியில் கலக்கியவர். எத்தனையோ காமெடியன்கள் வந்த நிலையில் விவேக் சமூகம் சார்ந்த கருத்துகளையும் தனது காமெடி மூலம் கொண்டு வந்தார்.

விவேக் தனது காமெடி டிராக்கிற்காக ஒரு குழுவை வைத்திருந்தார். அந்த குழுவில் செல் முருகன் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அந்த வகையில் அந்த குழுவில் இருந்தவர்தான் அண்ணாதுரை கண்ணதாசன். இவர் நடிகர் பிரசாந்த நடித்த ஜாம்பவான் படத்தில் பஞ்சாயத்து தலைவராக நடித்தார். விவேக் மருத்துவர். விவேக் கிளினிக்கில் இருந்த போது அந்த பஞ்சாயத்துத் தலைவர், தனது ஆட்கள் வருவார். அப்போது விவேக் யார் நீங்கலாம் என கேட்பார். அதற்கு அந்த பஞ்சாயத்து தலைவர் பார்த்தா தெரியலை என்பார். அதற்கு விவேக் பார்த்தா தெரியறதுக்கு நீ என்ன பரங்கிமலையா என கேட்பார்.
அப்போது பஞ்சாயத்து தலைவருடன் இருப்பவர்கள் அண்ணனுக்கு எழுத்து தெரியலை, சாயங்காலத்துக்குள்ள அவர் எல்லா எழுத்துகளையும் படிக்கணும் என்பார்கள். உடனே விவேக் அவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு போர்டில் அ என எழுதி தெரியுதா தெரியுதா என சைஸ் வாரியாக கேட்பார். எல்லாத்துக்கும் அந்த பஞ்சாயத்து தலைவர் தெரியவில்லை என்றே சொல்வார்.
உடனே விவேக் பெரிய எழுத்தாக அ என எழுதி போர்ட்டை எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் அருகே வந்து கேட்பார். அப்போது அவர் தெரியவில்லை என்பார். உடனே விவேக்கிற்கு கோபம் வந்து போர்டை கீழே போட்டுவிடுவார். "நான் தெரியறேனா, இந்த கோட் தெரியுதா, சட்டை தெரியுமாஇந்த வாட்ச் தெரியுதா " என வரிசையாக கேட்கும் போது அந்த பஞ்சாயத்து தலைவர் தெரியுது என்பார்.
அதற்கு விவேக் எல்லாம் தெரியுது அந்த போர்டில் இருக்கும் எழுத்து மட்டும் ஏன் தெரியலை என கேட்பார். அதற்கு பஞ்சாயத்து தலைவர் எப்படி தெரியுமா, படிச்சிருந்தாதானே தெரியும், நான் மழைக்கு கூட பள்ளிக் கூடம் பக்கமே ஒதுங்கினது இல்ல என்பார். உடனே விவேக் அதிர்ச்சி அடைந்து ஓ நீ தெரியல தெரியலனு சொன்னது அந்த தெரியலையா?
தமிழில் முதல் எழுத்தே அ, அதுவே உனக்கு தெரியலை. நீ 18 பட்டிக்கும் தீர்ப்பு வேற சொல்றியா என கேட்பார். ஓ இதுதான் அனாவா என அந்த பஞ்சாயத்து தலைவர் கேட்பார். பின்ன ஓனாவா என கேட்ட விவேக், உன் பிள்ளைகளையாவது படிக்க வச்சியா, உன் பேர பிள்ளைகளையாவது படிக்க வச்சியா என கேட்பார், அதற்கு அவர் இல்லை என்பார். இந்த காமெடி மூலம் அண்ணாதுரை பிரபலமடைந்தார்.
விவேக் இறந்த போது அந்த துக்கம் தாங்க முடியாமல் அண்ணாதுரை கதறி அழுதார். எத்தனையோ பேரைவாழ வைத்தவர் விவேக் என புகழாரம் சூட்டியிருந்தார். இன்று விவேக் இல்லாத நிலையில் அவருடைய காமெடி குழுவில் இருந்த பலர் வாழ வழி இல்லாமல் பசி பட்டினியுடன் இருந்து வருகிறார்கள்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன?












Click it and Unblock the Notifications