வந்தே பாரத்தில் ஸ்லீப்பர் கோச்! சும்மா ஸ்டார் ஹோட்டல் அறை கணக்கா இருக்கு.. முதலில் எங்கு தெரியுமா?
சென்னை: ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் எந்தெந்த நகரங்களுக்கு இயக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது என்பதால் இந்த ரயிலால் பொதுமக்களுக்கு பயண நேரம் குறையும். அத்துடன் பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதி என இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேல் இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதாவது பெரம்பூர் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 34 வழித்தடங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
என்ன ஒரு குறை இந்த ரயில்களில் பெர்த் எனும் படுக்கை வசதி இல்லாததுதான். இதில் மொத்தம் இரு பிரிவுகள் உள்ளன. எக்கனாமி, எக்ஸிகூட்டிவ் ஆகியவை ஆகும். இதில் 8 பெட்டிகளில் ஒரே ஒரு பெட்டி மட்டும் எக்ஸிகூட்டிவ், மற்றவை எல்லாம் எக்கனாமி ஆகும். இந்த நிலையில் பெர்த் வசதி வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்களால் நீண்ட நேரம் உட்கார்ந்து செல்ல முடியாது என்பதால் பெர்த் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் ஸ்லீப்பர் கோச் எப்படி இருக்கும் என்ற மாதிரியை மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் விளக்கியிருந்தார்.
அது பார்ப்பதற்கே ஸ்டார் ஹோட்டல் அறைகளின் ரேஞ்சுக்கு இருந்தது. இந்த நிலையில் இந்தூரில் இருந்து ஜெய்ப்பூர், மும்பை, சூரத் உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர்- தாஹோட் ரயில் பாதையின் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணி முடிந்ததும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் மும்பையுடன் இந்தூர் நேரடியாக இணைக்கப்படும். இதற்காக ஸ்லீப்பர் கோச்சுகளும் பிப்ரவரி- மார்ச் மாதத்திற்குள் வரவழைக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இந்தூரில் தெரிவித்திருந்தார். மத்திய பிரதேசத்தின் பெரிய நகரமான இந்தூர் , மாநிலத்தின் பெரிய வணிக மையமாகும். இதை கருத்தில் கொண்டே அங்கு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. ரயில் வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
வரும் 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு, இந்தூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களிலும் அதாவது இந்தூர் சந்திப்பு மற்றும் லட்சுமிபாய் நகர் ரயில் நிலையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அதிவேக பயணம் செய்யும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications