சேரன் பாண்டியனில் விஜயகுமாரின் மகளாக நடித்தாரே ஸ்ரீஜா.. இவர் தமிழக மாஜி அமைச்சரின் மருமகளாமே
சென்னை: சேரன் பாண்டியன் படத்தில் விஜயகுமாரின் மகளாக வருவாரே நடிகை ஸ்ரீஜா, அவர் ஒரு மறைந்த முன்னாள் அமைச்சரின் மருமகள் என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீஜா. இவரது குடும்பமே கலை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் ஸ்ரீஜாவும் சிறுவயது முதலே நடித்து வருகிறார். இவர் குழந்தை நடசத்திரமாக கிட்டதட்ட 15 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீஜா. இவரது குடும்பமே கலை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் ஸ்ரீஜாவும் சிறுவயது முதலே நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக கிட்டதட்ட 15 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிறுவயதிலேயே சிறப்பாக நடித்ததை பார்த்துதான் அவரை இயக்குநர்கள் நிறைய பேர் ஒப்பந்தம் செய்தனர்.அந்த வகையில் மவுனம் சம்மதம் படத்தில் அவரது நடிப்பு தமிழக ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது. இதற்கு அடுத்து சேரன் பாண்டியன் படத்தில் ஆனந்த் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் பாவாடை தாவணியில் அழகாக நடித்திருப்பார்.
அவர் விஜயகுமாரின் மகளாக நடித்திருந்தார். அது போல் எம்ஜிஆர் நகரில், தையல்காரன், முதல் குரல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். முதல் குரல் திரைப்படத்தில் சிவாஜி, அர்ஜுன் நடித்த படமாகும். இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு செவ்வந்தி என்ற படத்தில் ஸ்ரீஜா நடித்திருந்தார். இந்த படத்தை பி.எஸ். நிவாஸ் இயக்கியிருந்தார்.
அந்த படத்தில் சந்தானபாண்டியன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசை இளையராஜா. 5 பாடல்களும் அருமை. அதிலும் செம்மீனே செம்மீனே பாடல் இன்று வரை மிகவும் பிரபலம். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சந்தானபாண்டியனுடன் ஸ்ரீஜாவுக்கு காதல் ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் சந்தான பாண்டியனுக்கும் ஸ்ரீஜாவுக்கும் 1993 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீதரன், உஷா ஆகிய மகனும் மகளும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே என் ராஜாங்கம் படத்தில் நடிக்க ஸ்ரீஜா ஒப்புக் கொண்டார். இதனால் அந்த படத்தை மட்டும் நடித்து கொடுத்த ஸ்ரீஜா, அதன் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீஜா தமிழக முன்னாள் அமைச்சரின் மருமகள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர் திருமணம் செய்து கொண்டிருக்கும் சந்தானபாண்டியன், மறைந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மகனாவார். செ.அரங்கநாயகம் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
அரங்கநாயகம் இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்தும் இரு முறை கோவை மேற்கு தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுகவிலிருந்து விலகி 2006 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் 2014 இல் திமுகவிலிருந்தும் விலகினார். இவர் அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தனது பெயரிலும் மனைவி, மகன் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.15 கோடிக்கு சொத்துத் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
2017-ல் வெளியான சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்காக அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2021 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு வயது 90.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications