போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்.. ரூ.5500 மாதந்தோறும் வேணுமா? அஞ்சலக சூப்பர் திட்டம்.. சபாஷ் எம்.ஐ.எஸ்
சென்னை: பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் இயக்கப்பட்டுவரும் நிலையில், மிகவும் பயன்தரத்தக்க திட்டமாக இருந்துவருவது எம்ஐஎஸ் என்ற திட்டமாகும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா?
பொதுமக்களுக்கு, உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை நம்முடைய அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், மக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் அஞ்சலக திட்டங்கள் எப்போதுமே பெற்று வருகின்றன. இதற்கு காரணம், அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானது.. நம்பகமானது.

எனவேதான், மாதந்தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள், Post Office Monthly Income Scheme - MIS (எம்ஐஎஸ்) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கூட்டுக்கணக்கு: இந்த திட்டத்திற்கு மொத்தம் 5 வருடம் முதிர்வு காலம் வழங்கப்படுகிறது.. ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4 சதவீதமும் தரப்படுகிறது..
இந்த திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு மாத வருமானம் ரூபாய் 5500 பயனாளரின் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு செலுத்தப்படும். திட்டத்தின் முடிவில் வட்டியாக ரூபாய் 3 லட்சத்து 33 ஆயிரத்தையும் பயனாளர்கள் பெற முடியும்.. திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு நீட்டிக்க விரும்பினால், அதற்கான விருப்பம் வழங்கப்படும்.
எனினும், முதிர்வு காலத்திற்கு முன்னதாக தொகையை எடுக்க விரும்பும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.
அபராதம்: 5 வருடத்துக்கு முன்பே பணம் தேவைப்படால் அதற்கு சில விதிகள் உள்ளன.. குறிப்பாக, 1 வருடத்திற்குள் உங்களால் பணம் எடுக்க முடியாது.. ஒரு வருடத்திற்கு பிறகு, கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான வசதியைப் பெறுவீர்கள், ஆனால் அபராதமாக சில பணம் கழிக்கப்படும். ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
கணக்கை தொடங்கி 3 வருடத்துக்கு பிறகும், 5 வருடத்துக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுத்தால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தைக் கழித்த பிறகு வைப்புத் தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்..
சலுகைகள்: இந்த திட்டத்தில் தனி நபராகவும், கூட்டாகவும் சேர்ந்து முதலீடு செய்யலாம். இதனை குழந்தைகள் பெயரில் பாதுகாவலர் துணையுடன் தொடங்கி கொள்ளலாம். 10 வயதிற்கு மேலான குழந்தைகள் அவர்களாகவே இந்த கணக்கினை நிர்வகித்து கொள்ள முடியும். அதேபோல இந்த அஞ்சலகத்தின் நாமினி வசதியும் உண்டு. உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications