செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் போது இந்த இரண்டு விஷயங்கள் நடக்கும்.. ஏமாந்துவிடாதீர்கள்!
சென்னை: செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் போது இந்த இரண்டு விஷயங்களில் ஏமாந்து விடாதீர்கள்.
வீடுகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் செய்ய வேண்டும். தனிப்பட்ட வீடுகளில் நாமே செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நபர்களை அழைக்க வேண்டும். அபார்ட்மென்ட்களில் அசோசியேஷன் மூலம் இந்த பணிகள் செய்யப்படும்.

இவ்வாறு செய்யும் போது சில சமயங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெறும் என்கிறார்கள். இதுகுறித்து பிலிம் ஃபுட் ஃபன் மற்றும் ஃபேக்ட் எனும் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 1. வீட்டின் செப்டிக் டேங்க் நிரம்பும் போது நாம் செப்டிக் டேங்க் சர்வீஸ் கூப்பிடுவோம் அவர்கள் ஒரு டேங்கை எடுத்துக் கொண்டு நாலைந்து பேர் இரண்டு மூணு பக்கெட் உடன் வருவார்கள்.
எல்லாம் முடித்த பிறகு உங்களை டாய்லெட்டில் தண்ணீர் ஊற்றுமாறு சொல்லுவார்கள் பின்னர் கடைசியாக அவர்கள் வைத்த டியூபை கழுவுவது போல் ஏற்கனவே அவர்களின் பக்கெட்டில் கலந்து வைத்திருக்கும் ரசாயனத்தை டேங்கின் உள்ளே ஊற்றி விடுவார்கள். அந்த ரசாயனம் கீழே உள்ள மண் தண்ணீரை ஈர்க்கும் சக்தியை இழக்க செய்யும். இதனால் சீக்கிரமே டேங்க் நிரம்பி விடும் மீண்டும் மூன்று நான்கு மாதத்தில் அவர்களை நீங்கள் அழைப்பீர்கள் அதற்குத்தான் இந்த டெக்னிக். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் டேங்க்னுள் அவர்களை எதையும் ஊற்ற விடாதீர்கள்.
2. டேங்க் கொண்டு வரும்போது அதில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி தான் சில பேர் எடுத்துட்டு வருவாங்க. ஆனால் முதலிலேயே டேங்க் எம்டியாக இருக்குதா என்பதை நன்றாக செக் செய்யவும். நிறைய பேர் ஏமாறுவது இதில் தான். செப்டிக் டேங்க் கிளீன் செய்வதற்கு 2000 என்று சொல்லுவார்கள் ஆனால் இரண்டு, மூன்று லோடு என்று 6000 ரூபாய் கறந்து விடுவார்கள் அதனால் நாம் தான் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்களே,
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) December 13, 2023
செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் போது இந்த இரண்டு விஷயங்களில் ஏமாறாதீர்கள்...
1.வீட்டின் செப்டிக் டேங்க் நிரம்பும் போது நாம் செப்டிக் டேங்க் சர்வீஸ் கூப்பிடுவோம் அவர்கள் ஒரு டேங்கை எடுத்துக் கொண்டு நாலைந்து பேர் இரண்டு மூணு பக்கெட் உடன் வருவார்கள். எல்லாம் முடித்த… pic.twitter.com/xpXQZEozuh
தமிழ்நாட்டில் செப்டிக் டேங்க் கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது. செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு , உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றம் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய தனி நபரை நியமனம் செய்வது சட்ட விரோதமானது. ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையை சுத்தம் செய்யும் போது, சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் அதற்கு வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு.
சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மரணம் அடைபவரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications