Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளதாரர்கள்.. வருமான வரியை கட்டாவிட்டால் என்னாகும் தெரியுமா? யாருக்கெல்லாம் வரிவிலக்கு பொருந்தும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரியை செலுத்தாவிட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன தெரியுமா? அபராதம் எவ்வளவு தெரியுமா? யாருக்கெல்லாம் வரிவிலக்கு உண்டு? தமிழகத்தில் வரிதாக்கல் எப்படி உள்ளது?

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

income tax itr monthly salary

மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஏய்ப்பு: எனினும், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுவதால், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.

ஆன்லைனிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. அதேபோல, வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு, வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், அது தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும். அப்படியானால், 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

வரிச்சலுகை: இந்த அபராதத்துடன் வரிக்கு வட்டியும் சேர்ந்துவிடும். வரிச்சலுகைகளையும் பெற முடியாது. வரி பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தேதியில் வருமான வரி தாக்கல் செய்தால், வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்கும்.

குறைவான தொகையை வரியாக செலுத்துவோருக்கு, அதாவது வரிக்குரிய வருவாயாக கணக்கிடப்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், ரூ.1,000 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம். அதே நேரம் உங்கள் வரிக்குரிய வருவாய் 5 லட்சத்தை தாண்டினால் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படலாம்..

வரிகணக்கு: அதேசமயம் வருமான வரிவிலக்கு யார் யாருக்கு பொருந்தும் தெரியுமா? வருமான வரி சட்டத்தின்படி, மொத்த ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டாம். புதிய முறையில் இந்த வரம்பு 3 லட்சமாகும்... அதனால், இந்த வரம்பிற்கு மேலே இருப்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

எனினும், வருமான வரி விலக்கு பெறும் அளவுக்கு வருமானம் இருந்தாலும், மற்ற நிபந்தனைகள் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, கரண்ட் பில் வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தினால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.. இதற்கான திருத்தம், 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

வெளிநாட்டு பயணம்: அதே போல, தனக்காக அல்லது இன்னொருவருக்காக வெளிநாட்டு பயணத்திற்காக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் மொத்தமாக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை வருமான வரி செலுத்துவது முறையாக நடந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி, "வரி பிடித்தம் செய்வோருக்காக https://tnincometax.gov.in என்ற இணையதளத்தில் வருமானத்தில் வரி பிடித்தம் தொடர்பான 16 தலைப்புகளில் வீடியோக்களும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.

எச்சரிக்கை: வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வட்டி, அபராதம் வசூலிப்பதுடன் வழக்கு தொடர்ந்து சிறை தண்டனையும் பெற்றுத் தரப்படும்.. வரி செலுத்த மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர தயங்கமாட்டோம்" என்று ரவிச்சந்திரன் ராமசாமி எச்சரித்திருந்ததும் நினைவிருக்கலாம்.

புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்யும் நபர்களுக்கு 3 லட்சம் வரை வரி கிடையாது. 3 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை - 5 சதவீதம் வரி, 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வரி, 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதம் வரி, 12 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை 20 சதவீத வரி மற்றும் 15 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

ஆண்டு வருமானம்: மூத்த குடிமக்களான 60 முதல் 80 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை. 80 வயதுக்கு மேலான சிறப்பு மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரை வரி இல்லை..

மற்றவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை...2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை 5% வரி விதிக்கப்படும், 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை 20% வரி மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30% வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+