Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தபாலில் வாழ்நாள் சான்றிதழ்.. பென்ஷன்தாரர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழில்.. மத்திய அரசு சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற வேண்டுமானால், ஒவ்வொரு வருடமும் வாழ்க்கை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.. அந்தவகையில், ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO ​​எளிமைப்படுத்தியுள்ளது.

Survival Certificates Pensioners Life Certificate Postal Department Central Government


ஊழியர்கள்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் ஏராளமான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தபால் துறை: இவைகளை தவிர்க்கவே, தபால் துறையின் மூலம் சமீபத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் நம்பர், செல்போன் நம்பர், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகையை பதிவு செய்தாலே போதும்.. அடுத்த சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

ஓய்வூதியதாரர்கள்:
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை பதிவு செய்யலாம். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.

உயிர்வாழ் சான்றிதழ்: இந்நிலையில், மாநில அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30 செப்டம்பர் 30ம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட வாரியாக அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.

அதில், "ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முகம் சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

தபால்தாரர்கள்:
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். மேலும் இச்சேவையை பெறுவதற்கு கீழ்காணும் இணையதள, வாட்ஸ்அப் வழிகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்து தருவார்கள்.

https://ccc.cept-gov.in/covid/request.aspx > service request >IPPB Jeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+