வீடியோவில் பதிவான சிசிடிவி காட்சிகள்.. ஜிம் பயிற்சியாளர் மரணத்திற்கு காரணமே இதுதான்.. கொடுமை!
சென்னை: சேலம் மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
அவரின் மரணத்திற்கு முன் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், மகாதீர் முகமது மரணத்திற்கு முன் முதுகிற்கு பயிற்சி செய்துள்ளார். மிக தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். நீண்ட காலமாக பயிற்சி செய்பவராக இருந்தும் கூட.. பார்ம் சரியாக இல்லாமல் மிக மோசமாக வேகமாக பயிற்சி செய்துள்ளார். மூச்சு விட்டு விட்டு பயிற்சி செய்யாமல்.. மிக வேகமாக.. கடுமையாக பயிற்சி செய்துள்ளார்.

அவரின் இந்த பயிற்சி வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. அவர் மிக வேகமாக.. முறையான பார்ம் இன்றி நீண்ட நேரம் பயிற்சி செய்தது இதயம் மிக வேகமாக துடிக்க காரணமாக அமைந்துவிட்டது.
உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற மகதீர் மகமுது நீண்ட நேரம் வெளியில் வராததால் உறவினர்கள் சென்று பார்த்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். மருத்துவர் பரிசோதனையில் மகதீர் முகமுது உயிரிழந்துவிட்டது உறுதியானது. 3 மணி நேரம் அவர் தினமும் பயிற்சி செய்துள்ளார். இது அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்தடுத்து பாடி பில்டிங் செய்யும் பலரும் ஜிம்களிலேயே மடிந்து விழுந்து சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு நடிகர் புனீத் ராஜ்குமார் ஜிம்மில் மரணம் அடைந்தார். வெயிட் லிப்டிங் தூக்கிக்கொண்டு இருக்கும் போதே அவர் மரணம் அடைந்தார். அவரின் கடைசி வீடியோ கூட இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் அது கடைசி சம்பவம் கிடையாது.
அதற்கு முன்பும், பின்பும் இதேபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. அதில் புதிதாக இணைந்ததுதான் நேற்று நடந்த சம்பவம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதேபோல் சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பெயர் ஏபின் என்று கூறப்படுகிறது. அங்கே தினமும் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார் இவர். தானும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது. பயிற்சி செய்யும் போது மயக்கம் வந்துள்ளது. இதனால் புத்துணர்ச்சியாக உணர இவர் ஜிம் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கே குளிக்கும் போதே இவர் மயங்கி விழுந்து உள்ளார் . பல மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் பலியாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் அந்த ஜிம் டிரெய்னர் பலியானதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?: முக்கியமாக கொரோனாவிற்கு பின் இப்படி பலர் ஜிம்மிலேயே பலியாகி வருகின்றனர். பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகி உள்ளது. ஸ்டெராய்டு ஓவர் டோஸ் காரணமாக மரணம் ஏற்படுவதை கூட ஏற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சாதாரண மரணங்கள் ஜிம் பயிற்சி, கொரோனாவிற்கு பின்பான மாரடைப்பு வாய்ப்புகள் ஆகியவை மீது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி இந்தியா முழுக்க பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜிம்மிற்கு செல்லும் ஆண்கள் மட்டும் இப்படி திடீர் திடீரென மாரடைப்பு வந்து பலியாவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டயட் காரணமா? போதிய தண்ணீர் குடிக்காததா? அதிக உடல் பயிற்சி காரணமாக ஏற்படும் வேகமான மூச்சு இரைப்பா? அதிக எடை தூக்குவதா? புரோட்டீன் பவுடர் எடுப்பதா? நீண்ட நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதா? கொரோனாவிற்கு பின்பான நீண்ட கால பக்க விளைவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications