காட்டுக்கு போறீங்களா? இந்த 2 மரத்தடியில் மட்டும் ஓய்வெடுக்காதீங்க! கரடி நீச்சல் அடிப்பதில் மாஸ்டர்!
சென்னை: மிகவும் ஆபத்தான விலங்கான கரடிகள் குறித்து சுவாரஸ்ய தகவல்களையும் அதனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்தும் வனச்சரகர் சதீஷ் நிர்மல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை சரகர் சதீஷ் நிர்மல் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த வீடியோவில் நான் பேச போவது கரடிகளை பற்றி! உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன. அமெரிக்காவில் இருக்கும் கரடிகளை அமெரிக்கன் பிளாக் பியர்ஸ் என்பார்கள். இந்தியா மற்றும் அதை சுற்றியிருக்கும் கரடிகள் ஏசியன் பிளாக் பியர்ஸ் என்பார்கள்.

ஜங்கிள் புக் படத்தில் பிரவுன் நிற கரடி இருக்கும். அதை பிரவுன் பியர்ஸ் என்பார்கள். பனி பிரதேசங்களில் வெள்ளை நிறத்தில் இருக்கும் கரடிகளை போலார் பியர்ஸ் என்பார்கள். நம் தமிழகத்தில் மிக முக்கியமான வகையான கரடி ஸ்வாம்ப் பியஸ், ஜியன்ட் பாண்டாஸ், சன் பியர்ஸ், ஸ்பெக்டகிள் பியர்ஸ் என 8 வகை உள்ளது.
சிறப்புகள்: இந்த 8 வகை கரடிகளில் இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன. இந்த 4 வகைகளில் பிரத்யேகம் என பார்த்தால் ஸ்வாம்ப் பியர்ஸ்தான். இதன் உருவ அமைப்பில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு. கரடி என்றாலே அதன் பொசு பொசு முடிகள், கூர்மையான நகங்கள்தான். கரடிகள் கரையான் புற்றுகள், எறும்பு புற்றுகளை தோண்டி சாப்பிடும்.
அதன் கீழ் உதடு மட்டும் மற்ற விலங்குகளை காட்டிலும் பெரியதாக இருக்கும். கீழ் உதட்டால் மூக்கின் நுனியை தொடும் அளவுக்கு கூட கரடியால் கொண்டு வர முடியும். கரடிகளுக்கு சிங்க பற்கள் இருக்காது. கரையான் புற்றுகளில் தலையைவிட்டு சாப்பிடும் போது அதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் இயற்கையாகவே சிங்க பற்கள் கிடையாது.
கரடிகளின் கால்கள் மனிதனுடைய கால்களை போலவே இருக்கும். காடுகளுக்கு போனால் கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம். கரடிகளுக்கு மூக்கில் உள்ள துளைகளை தானாகவே திறந்து மூடும். கரையான் புற்றுகளுக்கு தலையை விட்டு சாப்பிடும் போது அங்கிருக்கும் தூசுகள் எல்லாம் அதன் மூக்கினுள் போகாமல் இருக்க இயற்கையாகவே அதன் மூக்கு துளைகள் மூடிக் கொள்ளும்.
வாழ்வியல் முறை: பொதுவாகவே கரடிகள் குகைகளுக்குள்தான் இருக்கும். பாறை இடுக்குகளில் அதிகமாக வாழும். இது இரவு நேரத்தில் இரை தேடும் உயிரினம். அது போல் காலை நேரமும் மாலை நேரமும் சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் போதும் இது இரையை தேடும். கரடிகளின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன்.
டிசம்பர் மாதம் காட்டுக்குள் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் குட்டி போடும். ஒரே நேரத்தில் ஒரு குட்டியோ அல்லது 2 குட்டியோ போடும். 210 நாள் அதன் கர்ப்ப காலம் ஆகும். 2 ஆண்டுகளுக்கு அந்த கரடி குட்டி தாயை விட்டு பிரியாது. இந்த 2 ஆண்டுகளில் காட்டில் எப்படி இருக்க வேண்டும். ஆபத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தாய் கரடி சொல்லிக் கொடுக்கும்.
முதுகுகளில் குட்டிகளை வைத்துக் கொண்டு கரடிகள் நடந்து செல்லும். குட்டிகளுடன் கரடி இருக்கும் போது பக்கத்திலேயே போக கூடாது. கரடிகள் எப்போதும் தனித்தனியாகவே இருக்கும். கூட்டம் கூட்டமாக இருக்காது. இனப்பெருக்க காலத்தில் மட்டும்தான் ஆணும் பெண்ணும் சேரும்.
உணவு பழக்க வழக்கங்கள்: எறும்புகளையும் கரையான்களையும் அதிகமாக சாப்பிடும். இவை தவிர்த்து நிறைய பழங்கள், விதைகளையும் சாப்பிடும். மிகவும் அரிதாக இறந்த புலியின் மாமிசத்தையும் உண்ணும். வட இந்தியாவில் பஹுவா எனும் பூ இருக்கிறது. அந்த பூக்கள் கோடை காலங்களில் பூத்துக் குலுங்கும். அதை கரடிகள் சாப்பிடும்.
அதில் ஆல்கஹால் இருப்பதால் அதை சாப்பிட்டுவிட்டு கரடிகள் டான்ஸ் ஆடும். அது போல் பீடி இலைகளையும் சாப்பிடும். வட இநதியாவில் இந்த பூச்செடி மற்றும் இலைகள் இருப்பதால் நாம் இந்த மரத்தடியில் ஓய்வு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த கரடிகளை மனிதர்களாகிய நாம் 13 ஆம் நூற்றாண்டில் துன்புறுத்தியுள்ளோம்.
மராட்டிய, முகலாய மன்னர்கள் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கரடிகளை வைத்து பிழைப்பு நடத்தினர். அவர்கள் காட்டுக்குள் சென்று 6 மாத குட்டியை எடுத்து பயிற்சி பெறுவார்கள். ஒரு வயது ஆகும் போது கரடிகளின் பற்களை அடித்து எடுத்துவிடுவார்கள். ஒரு ஊசியை வைத்து அதன் மூக்கில் துளை போட்டு அதை கட்டுப்படுத்த கடிவாளம் போடுவார்கள்.
மலட்டுத்தன்மை ஏற்படுவதற்காக மயக்க மருந்து கொடுக்காமலேயே அதற்கு குடும்ப கட்டுபாடு செய்வார்கள். மிகவும் துன்புறுத்தியே அந்த கரடிகளை அவர்கள் வைத்திருந்தார்கள். சில நேரங்களில் கரடிக்கு கண்களில் நோய் வந்து அது பார்வையை கூட இழக்க நேரிட்டாலும் அதை வைத்து பிழைப்பு நடத்தினர். இது எப்போது மாறியது என்றால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1972 இல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார்கள். அது முதல் கரடிகளை வீட்டில் வளர்ப்பது, சாலைகளில் வைத்து பிழைப்பு நடத்துவது எல்லாம் நிறுத்தப்பட்டது.
டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ஜெய்ப்பூர் சாலையில் மட்டும் 850 கரடிகளை மீட்டுள்ளனர். அது போல் கரடிகளை சர்க்கஸில் வைத்து வித்தை காட்டக் கூடாது என்ற சட்டத்தை நீதிமன்றம் போட்டது.
கரடிகள் தாக்கினால் பாதுகாத்துக் கொள்வது எப்படி: ஊருக்குள் கரடி வரும் வாய்ப்பிருக்கிறது என்றால் தனியாக போவதை தவிர்க்க வேண்டும். கூட்டமாகவும் பாட்டு பாடிக் கொண்டே பேசி கொண்டே சென்றால் கரடிகள் நம் பக்கம் வராது. கரடிகளுக்கு சர்பிரைஸ் கொடுப்பது பிடிக்காது. நாம் நேருக்கு நேராக பார்த்து சர்பிரைஸ் கொடுத்துவிட்டால் நம்மை கரடி அட்டாக் செய்ய ஆரம்பித்துவிடும். இதற்காகத்தான் நாம் இருப்பதை அதற்கு நாம் பாட்டு பாடியும் செல்போன் சவுண்ட்கள் மூலமாகவும் நாம் தெரியப்படுத்த வேண்டும்.
காட்டுக்குள் போகும் போது தற்காத்து கொள்வது எப்படி தெரியுமா? கரடியை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கரடி நம்மை பார்க்கவில்லை என்றால் நாம் எந்த சப்தத்தையும் எழுப்பக் கூடாது, கரடியை பார்த்து ஓடக் கூடாது, அதை பார்த்த படியே பின்னோக்கி நகர வேண்டும். பாதுகாப்பான தூரத்தை கடந்து விட்டால் ஓடிவிடலாம்.

கரடியும் உங்களை பார்த்துவிட்டது , நீங்கள் அதை பார்த்துவிட்டீர்கள் என்றால் அப்போது எந்த அசைவும் கொடுக்காமல் அப்படியே நின்றுவிட வேண்டும். கரடி உங்களை தவிர்த்து விட்டு போகும் வாய்ப்புள்ளது. கரடி உங்களை தாக்க வரும் போது இரு கைகளையும் மேலே தூக்கி ஒரு சப்தம் கொடுத்தால் கரடி பயந்து கொண்டு ஓடும் வாய்ப்புள்ளது.
நீங்கள் நன்றாக ஓடக் கூடியவர்கள் என்றால் ஓடி விடலாம். ஆனால் அதற்குமுன்பு 3 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். கரடி உங்களை விட வேகமாக ஓடும். மரங்கள் இருந்தால் ஏறக் கூடாது, அதுவும் வேகமாக மரம் ஏறும். பக்கத்தில் குளமோ ஆறோ இருந்தால் அதில் குதிக்கவும் கூடாது, நம்மை விட சிறப்பாகவே அது நீந்தும். கரடி மிகவும் ஆபத்தான உயிரினம். புலியிடம் இருந்து கூட தப்பலாம். ஆனால் கரடியிடம் இருந்து தப்பவே முடியாது.
இதனால் கரடி உங்களை தாக்க வந்துவிட்டால் செத்தது போல் நடிக்க வேண்டும். நன்றாக சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும். அப்போது அது உங்களை தாக்கும். ஆனால் காயங்கள் குறைவாகவே ஏற்படும். கரடியை எதிர்த்து சண்டையிடுவது சாத்தியமில்லை. அது புலியை எதிர்த்து சண்டையிடும் அளவுக்கு திறமை இருக்கிறது. இவ்வாறு சதீஷ் நிர்மல் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications