Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இபி பில்.. "ஷாக்"கடிக்குதே.. அதென்ன "சிம் மீட்டர்".. போஸ்டு பெயிடு + ப்ரீ பெயிடு.. மின்வாரியம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாரியம் பல்வேறு அதிரடிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமல்படுத்தி வருகிறது.. அந்த வகையில், ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணியினை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது.

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய "ஸ்டேடிக்" என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

Do you know what are benefits of Smar Meters: Tamil nadu Electricity board

முறைகேடுகள்: இதன் மூலம் மின்வாரிய ஊழியர்கள், அதை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர்..

இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும்.

விடுமுறை தினங்கள் இல்லை: இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் ..

அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.. ஆனால், விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

மின்வாரிய ஊழியர்கள்: இந்நிலையில், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மின்வாரிய அதிகாரிகள் இந்த ஸ்மார்ட் திட்டத்தை பற்றி சொல்லும்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 2 மாதங்களுக்குஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதற்காக, மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டரில் பதிவான மின் பயன்பாட்டு அளவை கணக்கு எடுக்கின்றனர். சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது...

Do you know what are benefits of Smar Meters: Tamil nadu Electricity board

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக, ஸ்மார்ட் மீட்டரில் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தி மின்வாரிய அலுவலக சர்வருடன் இணைக்கப்படும்.

மொபைல் போன்: கணக்கெடுக்கும் தேதி கணினியில் மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும். சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம்மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்கணக்கு எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு, பராமரிப்பது ஆகிய பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஒரு மீட்டரை பொருத்த ரூ.6 ஆயிரம் வரை செலவிட மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. அதைவிட குறைந்த செலவில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்... இதற்காக நுகர்வோரிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்கிறார்கள்.

ஸ்மார்ட் மீட்டர் சிஸ்டம்: அந்தவகையில், தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான பணிகளை மின்சார வாரியம் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது.. இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' சிஸ்டத்தில், சிம் பொருத்தப்பட்ட மீட்டர் மூலம் ஒவ்வொரு நுகர்வோரின் மின்சார உபயோகம் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன..

அதன்படி, மீட்டரில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் நுகர்வோரின் ஸ்டேடஸ் பதிவு செய்யப்படும். இதனால் நுகர்வோர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டாலும் பதிவுகள் மூலம் தகவல்கள் எடுக்கலாம்... இந்த அம்சங்கள் பழைய மீட்டரில் இல்லை.. இதனை வாரியமே பொருத்துகிறது. தனிப்பட்ட நுகர்வோர் அல்லது ஒட்டுமொத்த நுகர்வோரின் தகவல்கள் கொண்டு பயன்பாட்டை கணக்கிடலாம்.. மின்சாரத்தை துண்டிக்கவும் நேரடியாக வீட்டிற்கு ஊழியர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

டிரெயினிங் ஆரம்பம்: மின் கட்டணம் செலுத்தாதவர்களின் லிஸ்ட்டை கொண்டு, துண்டிப்பதற்கான அறிவிப்பை கொடுத்தால் தாமாகவே செய்து விடும்.. இப்போது, போஸ்ட் பெய்டு திட்டம் கொண்டுவரப்படும்நிலையில், 'பிரீ பெய்டும் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மதுரை மின்சார வாரியத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பொறியாளர்களுக்கும் இதன் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் துவங்கப்பட்டுவிட்டதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+