விஜய்யின் கல்வி விருது விழாவில் 5000 பேருக்கு சுடசுட தடபுடல் விருந்து.. மதிய உணவுக்கு என்ன மெனு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அங்கு அவர்களுக்கான மதிய உணவு தடபுடலாக தயாராகி வருகிறது.

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போதே அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் வேலைகளை அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாய் ஷோபாவும் முயற்சித்தனர்.

ஆனால் அவரோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினார். மேலும் தனது பெயரையும், கொடியையும், இயக்கத்தின் பெயரையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துவிட்டார். இதையடுத்து பெற்றோருடன் விஜய் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை என கூறப்படுகிறது.

Do you know what are the food served in Vijay students meet function?

இந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடலாம் என்றும் தனது பெயரையும் கொடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டாவது விஜய் அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் அதற்கு சமிக்ஞையாக விஜய் 3 விஷயங்களை செய்துள்ளார். ஒன்று அம்பேத்கர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அது போல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

அது போல் 10, பிளஸ் 2 தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குகிறார். இதற்காக இன்றைய தினம் நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் சந்திக்கிறார். இதற்கு மாணவ, மாணவிகளின் தாய், தந்தையருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கென புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வருவது முதல் தங்கும் இடம், உணவு, திரும்பி வீடு செல்லும் வரை அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கத்தினரே பார்த்துக் கொள்கிறார்கள். அதன் பேரில் ஒரு தொகுதிக்கு 9 பேர் வீதம் 234 தொகுதிகளுக்கும் 2000 பேர் முதல் 4000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அந்த மாணவர்களுக்கு இன்று காலை பொங்கல் , வடை, இட்லி உள்ளிட்டவை காலை உணவாக வழங்கப்பட்டது. அது போல் அவர்களுக்கு ஜூஸ், தண்ணீர் உள்ளிட்டவையும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. அது போல் மதிய உணவு ஜரூராக தயாராகிறது.

இந்த விழாவுக்கு 5000 பேருக்கு மதிய உணவு என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மதிய சாப்பாடு

ஜம்ஜம்
மாங்காய் ஊறுகாய்
இஞ்சி துவையல்
ஆனியன் வெள்ளரி தயிர் பச்சடி
கதம்ப பருப்பு பொறியல்
உருளை பட்டாணி வறுவல்,
சவ்சவ்கூட்டு
காலிபிளவர் பகோடா
வெஜ் புலாவ்
காரக் குழப்பு
முருங்கைக்காய் மாங்காய் சாம்பார்
தக்காளி ரசம்
அடை பிதமை பாயாசம்
ஆனியன் வடை
அப்பளம்
மோர்

ஆகியன உணவாக வழங்கப்படுகிறது. இந்த அரங்கில் அசைவ விருந்துக்கு அனுமதி இல்லை என்பதால் சைவ உணவு தயாரிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+