"அங்கே" என்ன நடக்குது?.. அச்சாணி ஆடுதே? முன்னாடியே கிளம்பி வர்றாரே ஸ்டாலின்.. திமுகவில் இப்பவே உதறல்
சென்னை: இன்று கொடைக்கானலிலிருந்து சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. இதையடுத்து, திமுகவில் மிகப்பெரிய அதிரடிகள் ஏற்படலாம் என்கிறார்கள்.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.. இந்தியா கூட்டணி வெற்றிக்காக, தமிழகமெங்கும் முதல்வர் ஸ்டாலின் அனலடிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வு எடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 29- ந்தேதி குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.. அங்கிருக்கும் பாம்பார்புரத்திலுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுக்க துவங்கினார்.
ஆர்வமிகுதி: கொடைக்கானலில் தான் தங்கியிருந்த பகுதியிலேயே காலை நேரத்தில் வாக்கிங் சென்றார்.. அத்துடன், பசுமை பள்ளத்தாக்கிலுள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்..
தான் செல்லும்பகுதியிலெல்லாம், அங்கிருக்கும் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்.. பின்னர் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.. தற்போது கோடை சீசன் துவங்கியிருப்பதால், சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்களும் முதல்வரை பார்த்து குதூகலமடைந்துவிட்டார்கள்.. முதல்வருடன் சேர்ந்து செல்பிகளையும எடுத்துக்கொண்டனர்...
துர்கா ஸ்டாலின்: முதல்வரை போலவே, அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள், துர்கா ஸ்டாலினுடன் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், 5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நாளை அதாவது 4- ந்தேதி வரை, அங்கேயே தங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றே முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..
எதிர்பார்ப்பு: கொடைக்கானலில் இருந்து புறப்படும் முதல்வர், மதுரை விமான நிலையம் சென்று, பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.. எதற்காக இந்த திடீர் பயண மாற்றம் என்று தெரியவில்லை.. ஆனால், விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்கலாம் என்ற தகவல் கசிந்தபடியே உள்ளது.
இதற்கு காரணம், தேர்தல் பணியில் சில சீனியர்கள் களப்பணியில் முழுமையாக இறங்கவில்லை என முதல்வரின் காதுக்கு எட்டியிருக்கிறது. இதைக்கேள்விப்பட்ட ஸ்டாலின், "ஆரம்பத்தில் நான் சொன்னதுதான்... வெற்றி வாய்ப்போ, வித்தியாசமோ குறைந்தால் சீரியசாக நடவடிக்கை எடுப்பேன். மன்னித்து விட்டுவிடுவேனென்று மட்டும் நினைத்து விடாதீர்கள்" என்று தனது முடிவில் மாற்றம் இல்லை என்றாராம். இதனால் அமைச்சர்கள் சிலருக்கு இப்போதே உதறல் எடுத்திருக்கிறதாம்.
பதவிகள்: அது மட்டுமல்ல, தேர்தலிலும் அமைச்சர் பணியிலும் ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்களிடமிருந்து மாவட்ட செயலாளர்களின பதவிகளும் பறிக்கப்படலாம் என்கிறார்கள்.. அமைச்சர் பதவியா ? அல்லது மாவட்ட செயலாளர்? இரண்டில் ஒன்றை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என கறாராக சொல்லிவிட்டு, அதன்படி ஆக்ஷன் எடுக்கவும் முதல்வர் தயாராகி வருகிறாராம்.
அதேசமயம், தேர்தலில் ஸ்டாலின் எதிர்பார்த்த ரிசல்ட்டை தரும் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிபோகாது என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.
எதிர்பார்ப்பு: இதனிடையே, தேர்தல் செலவுக்கென கட்சி தலைமை கொடுத்த பணம் விவகாரம் குறித்தும் ஒரு ரிப்போர்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முழுமையான ரிப்போர்ட் ஸ்டாலினிடம் கொடுக்கப்படும்போது கட்சியின் மா.செ.க்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கும் மண்டகப்பொடி நிறையவே விழும் என்றும் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எனவே, முதல்வரின் "முன்கூட்டியே" சென்னை வருகையானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது












Click it and Unblock the Notifications