புண்ணாக்கும் கிடையாது + கூட்டணியும் கிடையாது.. பாஜகன்னு சொன்னதுமே செம டென்ஷனான "தலை".. யார்னு பாருங்க
சென்னை: அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? கூட்டணி இனி கிடையாதா? என்ற சந்தேகங்கள் அரசியல் களத்தை அசைத்து வரும்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக கருத்து: இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது வேலுமணி பேசும்போது, "எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி கருத்தே எங்களது கருத்து. எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம்.. பெரியார் வந்த பிறகுதான், பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தது. அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது.. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. இது ஒரு தலைவருக்கான தகுதியும் கிடையாது" என்றார்.

பொள்ளாச்சி ஜெயராமன்: பிறகு பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. அதுவும் டாலர் நோட்டு.. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், தலைவர்களாகவும் ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்றார்.
இதையடுத்து, எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, "அண்ணாமலையை பாஜகவிலிருந்து நீக்கினாலோ, அல்லது தான் பேசியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மறுபடியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. ஆனால், அதற்கு வேலுமணி பதில் எதுவும் சொல்லாமல், அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

புண்ணாக்கு : அப்போது, மேடையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். வேலுமணியிடம் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்வியையும் எம்எல்ஏக்கள் கவனித்தனர்.. இதற்கு கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், "கூட்டணியும் கிடையாது... ஒரு புண்ணாக்கும் கிடையாது" என்று டென்ஷனாக சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்கினார்..
இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது ஷேர் ஆகிகொண்டிருக்கிறது. ஆக, அதிமுக கூடாரமே கொந்தளித்து போய் கிடப்பதாக தெரிகிறது.. மேலிட பாஜக இதனை எப்படி எதிர்கொள்ள போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!!
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications