ஆன்லைனில் "சோலார்" மானியம்..40% சூரிய சக்தி மின்சார மானியம் வேணுமா? இதோ மத்திய அரசு சரவெடி அறிவிப்பு
சென்னை: பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்திருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் போதுமான அளவுக்கு நமக்கு கிடைப்பதில்லை என்பதால்தான், மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

எனினும், கடந்த ஏப்ரல் மாதமான கோடை காலத்தில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.. வரும் 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு அலர்ட் செய்திருக்கிறது.
என்ன காரணம்: இதற்கெல்லாம் காரணம், புதிய குடியிருப்புகள், செல்போன், லேப்டாப் சாதனங்களின் பயன்பாடு, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு, தனிநபர் மின் பயன்பாடு அதிகரித்து வருவதுதான் என்கிறார்கள்-.. எனவேதான், மின்பற்றாக்குறையை போக்கவே, சோலார் மின்சாரம் பக்கம் கவனம் திரும்பி உள்ளது.. மத்திய அரசு இது தொடர்பாக மாநிலங்களுக்கு அறிவுறுத்தியபடியே உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியேபடியே வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியமும் வழங்குகிறது. குறிப்பாக, வீடு உள்ளிட்ட கட்டடங்களின் மேல் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது.
இணையதளம்: அந்தவகையில், நாடு முழுதும் வசிப்போர் மானியம் பெறுவதற்காகவே, solarrooftop.gov.in என்ற வெப்சைட்டில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி, கடந்த 2022 ஜூலை, 30ல் துவக்கப்பட்டது. இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு, விபரங்களை பரிசீலித்து, பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகை செலுத்தப்படுகிறது. ...
பசுமை எரிசக்தியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மத்திய அரசின் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மீண்டும், இதே கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
மின்வாரியம் ஒப்புதல்: இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, மத்திய அரசு, மானியம் பெறும் பயனாளி விபரத்தை, மாநில மின் வாரியங்களுக்கு தெரிவிக்கிறது. அதன்படி, மின் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து, மின் வாரியம் ஒப்புதல் தர வேண்டும்.
இதற்காக, solarrooftop.gov.in என்ற வெப்சைட்டில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்த பிறகு, மின் வாரியத்தின், லிங்க் தரப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலானோர் அந்த விபரங்களை பூர்த்தி செய்வதில்லையாம்.. அதனால்தான், மானியத்திற்கு ஒப்புதல் தருவதில் மத்திய அரசுக்கு தாமதமாகிறது என்கிறார்கள்.. எனவே, விண்ணப்பத்தை முழுதும் பூர்த்தி செய்வது தொடர்பாக நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications