சத்தமேயில்லையே.. "ஹைவேஸில்" விரைவில் வரும் மாற்றம்..நெடுஞ்சாலையில் அடுத்த அதிரடி.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய தமிழக அரசு அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.
சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இன்னொரு பக்கம் விழிப்புணர்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்தவகையில் புதிய மொபைல் ஃபோன் செயலியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. அதன்பெயர் ராஜ்மார்க்யாத்ரா என்பதாகும்.. நெடுஞ்சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காகவும், இப்படி ஒரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
புது செயலி: ராஜ்மார்க்யாத்ரா என்பது கூகுள் ப்ளே ஸ்டோர் + ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.. இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதுடன், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும்.. இந்த செயலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.
வானிலை அப்டேட், அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் கிடைக்கிறது..
ஜிபிஎஸ்: இந்த செயலியிலேயே புகார் அளிக்கும் வசதிகள் உள்ளன.. புகார்களை அளித்து, அதற்கான தீர்வையும் பெறலாம்... வாகனங்கள் ஏதாவது நெடுஞ்சாலையில், வேகமாக பயணித்தால், ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு உடனே அலாரம் சிக்னல்கள் அனுப்பப்படும்.
இந்நிலையில், தமிழகத்திலும், சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை, நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க, மொபைல் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்போகிறார்களாம்.. சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து அமைச்சர் வேலு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அதிரடி: அமைச்சர் பேசும்போது, "சாலைகளை பராமரிப்பு பணிகளில், அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளம் இல்லா சாலைகளாக பராமரிக்க வேண்டும். சாலைகளில் உள்ள வேகத்தடைகளை, வர்ணம் பூசி, தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து, விபத்துகள் ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும். சாலையில் உள்ள மரங்களுக்கு, கருப்பு, வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும். ஆபத்தான, உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்.
இப்போது நடந்து வரும் அனைத்து பணிகளையும், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, அதாவது அக்டோபர் மாதம் முன்பாக முடிக்க வேண்டும். குடிநீர் வாரியம், மின்சார வாரியம், மெட்ரோ, கழிவு நீரகற்று வாரியம் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து, சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில், மறு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

மொபைல் ஆப்: மழைக் காலத்தில் சுரங்க பாதைகளில் நீர் தேங்குவதை தவிர்க்க, தேவையான நீரேற்று பம்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும். சென்னையில் நடக்கும் சாலைப் பணிகளை, திட்டமிட்டவாறு செயல்படுத்த வேண்டும். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை, நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க மொபைல் ஆப் எனப்படும் மொபைல் போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்" என்றார் அமைச்சர்.
அமைச்சர் சொல்லியிருக்கும் இந்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டால், நெடுஞ்சாலையில் நடக்கும் அத்துமீறல்கள் புகார்களாக உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுவிடும் என தெரிகிறது..
அதேபோல, விதிமீறல்கள், வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலும், அது தொடர்பாக மெசேஜ்கள் அனுப்பப்படுவதால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏதாவது நடந்துவிட்டால், அதை மெசேஜ் மூலம் தாதமதமாகவே தெரிவிக்க முடியும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications