Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் தெரியுமா?.. பலன்பெறும் ஏழை மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக மத்திய அரசு எத்தனையோ உதவிகளையும், நலன்களையும் செய்து தந்து வருகிறது. நிதியுதவி, ஓய்வூதியம் போன்றவைகளுடன், வீட்டு வசதியையும் ஏற்படுத்தி தருகிறது. இதற்கு பெயர்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. (PMAY எனப்படும் PM Awas Yojana)

கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் சாராம்சமாகும்.. அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.

Do you know what is Pradhan Mantri Awas Yojana and what are the eligibility for PMAY

பிரதமர் மோடி: பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தையே அடியோடு மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக, மத்திய அரசு உத்தரவாதம் தந்து, இந்த திட்டத்தினை துவங்கியது. இந்த திட்டத்தை பொறுத்தவரை, நகர்ப்புறம் + கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன..

இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. இந்த 9 வருடங்களில் இதுவரைக்கும் 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகளை கிராமப்புற மக்களுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன.. இதில், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருடையது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும்..

ஏழை மக்களுக்கான திட்டமாக இது இருந்தாலும்கூட, பெண்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும், அவர்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். மத்திய அரசால் செயல்படுத்தப்படும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு வாங்க, மானியம் வழங்கப்படுகிறது.

மானியத்தொகை: எனவே, வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவு மாறுபடுகிறது.. அதேபோல,கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடங்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.. வட்டி விகிதமும் ரொம்பவும் குறைவு...

இந்த திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும் வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் இப்படியான வசதிகளும் இடம்பெற்று வருகின்றன.. இதன் பலனை பெற, வீட்டில் இருந்தபடியே மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவை பயன்படுத்த, சில நிபந்தனைகளும் உள்ளன.. வருமானம் மற்றும் நபரின் வகை அடிப்படையில் அரசாங்கம் மானியம் வழங்குகிறது.

கடன் வட்டி: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.

18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் எதுவும் எடுத்திருக்கக் கூடாது. அதேபோல, பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.

சக்ஸஸ்: இந்த திட்டம் பெருமளவு வெற்றிபெற்றதற்கு காரணம், வீடுகளை கட்டி வேகமாக முடிப்பது, சரியான நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவிப்பது இவையெல்லாம்தான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+