வாகன ஓட்டிகளுக்கு வந்த மேஜர் நியூஸ்.. இனி வேகமாக வண்டி ஓட்ட முடியாது.. "அந்த சத்தம்" வந்துரும்.. செம
சென்னை: நெடுஞ்சாலையில் நீங்கள் வேகமாக பயணம் மேற்கொண்டால், உடனே ஒரு குரல் உங்களுக்கு கேட்கும்? அது என்ன குரல்? யாருடைய குரல் தெரியுமா? இதை படிங்க
இந்த புதிய மொபைல் ஃபோன் செயலியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. நெடுஞ்சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காகவும், இப்படி ஒரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

செயலிகள்: இந்த செயலி குறித்தும், அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும், இந்த அமைச்சகம் சார்பில் விரிவான அறிக்கையும் வெளியாகியிருந்தது.
ராஜ்மார்க்யாத்ரா என்றால் என்ன?: ராஜ்மார்க்யாத்ரா என்பது கூகுள் ப்ளே ஸ்டோர் + ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.. இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதுடன், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும்.. இந்த செயலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.
வசதிகள்: தேசிய நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு அத்தியாவசிய தகவல்களின் களஞ்சியமாக இந்த ராஜ்மார்க்யாத்ரா ஆப் செயல்படுகிறது.. வானிலை அப்டேட், அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் கிடைக்கிறது..
இந்த செயலியிலேயே புகார் அளிக்கும் வசதிகள் உள்ளன.. புகார்களை அளித்து, அதற்கான தீர்வையும் பெறலாம்... நெடுஞ்சாலை தொடர்பான சிக்கல்கள் குறித்தும் புகாரளிக்கலாம்.. புகார்கள் உங்களுக்கு இருந்தால், அந்த இடத்தின் லோகேஷனை இணைத்து, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையும் இணைக்கலாம்..
உயர் அதிகாரிகள்: பதிவுசெய்யப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலவரையறைககுள் பார்த்து சரி செய்யப்படும்... ஏதேனும் தாமதம் ஏற்படும் பட்சத்தில், கால வரையறை தாண்டியதும் தானாகவே உயர் அதிகாரிகளுக்கு மாற்றப்படும்.

முழுமையான வெளிப்படைத்தன்மைக்காக பயனர்கள் தங்கள் புகாரின் இப்போது அப்டேட்டுகளையும் கண்காணிக்க முடியும்.. மாதாந்திர பாஸ்களைப் பெறவும், சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் (FASTag) தொடர்பான பிற வங்கிச்சேவைகளை அணுகவும் இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதி வேகமாக சென்றால் அறிவிப்புகள், வாய்ஸ் மூலமாக வரும் வகையில் வசதிகளும் இதில் உள்ளன" என்று அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பாதுகாப்பு: நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் வசதியும் இதில் செய்யப்பட்டு உள்ளது. பயணம் செய்வோர், தங்களது பயண அனுபவம் குறித்து, வீடியோவுடன் தகவல்களை, செயலியில் பதிவு செய்யலாம். வாகனங்கள் வேகமாக பயணிக்கும்போது, ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு எச்சரிக்கை சிக்னல்கள் அனுப்பப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications