Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குபேர மூலை".. சீனே மாறுதே.. "சாணக்கிய" எடப்பாடி வீசும் குண்டு.. கசிந்தது அந்த "ரகசியம்" அப்ப பாஜக

அதிமுக பாஜக இரு தரப்பினரிடையே திடீரென அதிருப்திகள் எழுவதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் எழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிருப்திக்கு உள்ளான பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம், இணைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடக்க போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.. கட்சி தாவல்கள், காட்டமான சாடல்கள், காரமான விமர்சனங்கள், பாஜக மீது வீசப்பட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.

அதிமுக - பாஜக இடையே பனிப்போர் மூண்டு வருகிறது.. அண்ணாமலைக்கு நெருக்கமான ஐடி விங்க் நிர்வாகி நிர்மல்குமார், திடீரென்று அதிமுகவில் இணைந்தார்.
அப்போது அண்ணாமலையை 420 என்று மறைமுகமாக குறிப்பிட்டு அறிக்கையையும் விடுத்தார்.. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு நிர்வாகி அதிமுகவில் இணைந்தார். பிறகு அடுத்தடுத்த நிர்வாகிகள் இணைந்து வருகிறார்கள்.

 பிக் வார்னிங்

பிக் வார்னிங்

இங்கிருந்து போகிறவர்கள் எல்லாம், வெறுமனே போய் கட்சியில் இணையாமல், போகும்போது, அண்ணாமலையை திட்டிவிட்டும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டும் போகிறார்கள்.. இதுவரை ஓபிஎஸ் ஆதரவாளர்களை மட்டுமே இழுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும் என்று அண்ணாமலை நேற்று எச்சரித்திருந்தார்.. இப்படி ஒரு எச்சரிக்கையை விட்டுட்டு, அதே சூட்டோடு, ஓபிஎஸ்ஸையும் சென்று சந்தித்து பேசியுள்ளார்.. ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் சொன்னார்.. பிறகு 2 பேருமே சிறிது நேரம் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.

 ஹாட் கொதிப்பு

ஹாட் கொதிப்பு

ஓபிஎஸ்ஸின் அம்மா இறந்து பல நாட்கள் கடந்த நிலையில், அதுவும், எடப்பாடி, அண்ணாமலை மோதல் முற்றியநேரத்தில், தேனிக்கு வந்து ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது... அநேகமாக இருவரும் சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக அதிரடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது... கட்சியில் இருந்து விலகுபவர்களை எல்லாம், எடப்பாடி பழனிசாமி அரவணைத்து கொள்வதால், பாஜகவின் கொந்தளிப்பு மேலும் அதிகமாகி, எடப்பாடியின் உருவபொம்மை எரிப்பு வரை சென்றுள்ளதால், விவகாரம் முற்றி வருவதாகவும் பார்க்கப்படுகிறது.

 பின்னி பின்னப்பட்ட வலைகள்

பின்னி பின்னப்பட்ட வலைகள்

இதற்கு பதிலடியாக, அதிமுகவினர் 50 பேர், தங்களது அதிமுக அடையாள அட்டையை அண்ணாமலையிடம் ஒப்படைத்துவிட்டு, பாஜவில் இணைந்த சம்பவமும் மறுபுறம் நிகழ்ந்தாலும், இரு தரப்பிலுமே அதிருப்திகள் அதிகமாகி கொண்டே செல்வதாக தெரிகிறது.. கட்சி தாவல்கள், மிகப்பெரிய தவறோ? யாராலும் ஏற்க முடியாத விஷயமோ கிடையாது.. இவை எல்லாமே இயல்பாக நடக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், கட்சி தாவியவர்கள் வெளியிட்ட குற்றச்சாட்டுகள்தான், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. ஈரோடு பிரச்சாரத்தின்போதுகூட, எடப்பாடி பழனிசாமி பேசும்போதுகூட, அதிமுக - பாஜக கூட்டணி எம்பி தேர்தலிலும் தொடரும் என்றே திட்டவட்டமாக அறிவித்திருந்தார்..

 ஹோப் பரஸ்பரம்

ஹோப் பரஸ்பரம்

அப்படியானால், அதற்குள் என்ன நடந்தது? இரு தரப்பிலும் என்னதான் மோதல்? என்கிற சந்தேகங்கள் வலம் வருகின்றன.. இப்படியான மோதல் போக்கிற்கு காரணம், பாஜக - அதிமுக இரு தலைமைகளிடம் உள்ள பரஸ்பர நம்பிக்கையின்மையே அடிப்படை காரணம் என்கிறார்கள். குறிப்பாக, ஈரோடு தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு, பாஜக - அதிமுக இரு தலைமைகளின் நிலைப்பாடும், கருத்தோட்டமும் மாறிவிட்டதாகவே சொல்கிறார்கள். அம்மன் கோயிலில், குபேர மூலையில் வேண்டுதலுடன் தங்கள் பிரச்சாரத்தை துவக்கியது அதிமுக.. இறுதியில், இந்த அளவுக்காவது வாக்குகளை பெற்று டெபாசிட்டையும் தக்க வைக்க முடிகிறதே என்று எடப்பாடிக்கு புதுதெம்பு கிடைத்துள்ளதாம்..

 பிணக்கு + கணக்கு

பிணக்கு + கணக்கு

அதேசமயம், பாஜக மட்டும் கூட்டணியில் இல்லாமல் போயிருந்தால், அதிகப்படியான வாக்கு வங்கியை தக்க வைத்திருக்க முடியுமே என்ற ஆதங்கமும் எழுந்துள்ளதாக தெரிகிறது.. கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்குகள் போய்விட்டதே என்ற புள்ளியை நோக்கியே பாஜகவிடம் எடப்பாடி தரப்பு அணுகுவதாக தெரிகிறது.. அதேபோல, வெறும் 40 ஆயிரம் வாக்குகளை மட்டும் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளநிலையில், அவரை மட்டுமே நம்பினால், தங்களுக்கு எம்பி தேர்தலில் நஷ்டம் என்ற புள்ளிளைய நோக்கி, பாஜக நகர்வதாக தெரிகிறது.. ஆக, இரு தரப்புமே போட்டுக் கொள்ளும் அரசியல் கணக்குகள்தான், பிணக்குகளில் வந்து நின்றுள்ளதாக கூறுகிறார்கள்.

 15 சதவீத வாக்கு

15 சதவீத வாக்கு

இந்நிலையில், நேற்றைய தினம் மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஒரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியை இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.. அவர் சொல்லும்போது, 'பாஜகவுக்கு வாக்கு சதவீதம் இல்லை என்பதுபோலத்தான், எடப்பாடிக்கும் வாக்கு சதவீதம் இல்லை என்பதே உண்மை.. 15 சதவீதம் வாக்குகளை எம்பி தேர்தலில் தாண்ட வாய்ப்பில்லை.. அதுமட்டுமல்ல, ஸ்டாலினுக்கு இணையான தலைவர் எடப்பாடி பழனிசாமி கிடையாது என்பதை மோடியே உணர்ந்திருக்கிறார்.. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரான, அதுவும் ஒரே கூட்டணியில் உள்ள எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

 அசால்ட் மீட்டிங்

அசால்ட் மீட்டிங்

சென்னையில் பிரதமர் மோடியை, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று அன்று ஜெயக்குமார் சொல்லியிருந்த நிலையில், அப்படி ஒரு சந்திப்பே கடைசிவரை நடக்காமல் போய்விட்டது.. ஆனால், உதயநிதி ஸ்டாலினோ, அசால்ட்டாக மிக எளிதாக சென்று பிரதமர் மோடியை சென்று சந்தித்துவிட்டு வருகிறார்.. சுருக்கமாக சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியை இருதுருவ அரசியல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தகுதியான ஒரு தலைவராக பிரதமர் மோடி கருதவில்லை.. காங்கிரசும் கருதவில்லை.. அன்புமணியும் கருதவில்லை, நானும் கருதவில்லை. எனினும், இரு கட்சிகளும் இப்படியே பிளவுபட்டால் அதனால் லாபம் இல்லை என்பதால், அநேகமாக 2 தரப்பையும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளும் நடக்கலாம்" என்று தன்னுடைய கணிப்பையும், கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்..

 தவிடுபொடி கணக்கு

தவிடுபொடி கணக்கு

அதேபோல அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி இதுகுறித்து சொல்லும்போது, எடப்பாடியும், அண்ணாமலையும் சேர்ந்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரப்போகிறது.. இதில் எடப்பாடியை பொதுச்செயலாளராக்க அண்ணாமலை தரப்பு விரும்புகிறது. ஆனால், பாஜக ஆதரவுடன்தான், எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகிறார் என்று அதிமுக தொண்டர்கள், பாஜக மீது கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இப்படியெல்லாம் நாடகம் நடத்துகிறார்கள். இந்த இருவரின் ரகசியம் கசிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, நிர்மல்குமார் விவகாரத்தையும், அதற்காக அண்ணாமலை பயன்படுத்தி கொண்டுவிட்டார். " என்று கூறியுள்ளார்

 பொய்ஜாலம்

பொய்ஜாலம்

ஆக, நடந்து கொண்டிருப்பது நாடகம் என்று ஒருதரப்பும், இரு தரப்புக்கு இடையில் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்று மறுதரப்பும் காரணங்களை கசிய விட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஒட்டுமொத்தமாக, ஈரோடு ரிசல்ட்தான் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அடிப்படை என்று சொல்லப்பட்டாலும்கூட, ஓபிஎஸ்ஸுடனான அண்ணாமலையின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. அதைவிட முக்கியமாக, எடப்பாடியைவிட ஸ்டாலின் மீதான நம்பகத்தன்மை மேலிட பாஜகவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்வதையும், நாம் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

அவசர அவசர மீட்டிங்

அவசர அவசர மீட்டிங்

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.. இந்த கூட்டத்தில், தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.. அதிமுக - பாஜக இடையே நடைபெற்று வரக்கூடிய சர்ச்சையில் அதிமுக இனி எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்தான வழக்கில் சுப்ரீம்கோர்ட், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது...

ஹோப்பில் டீம்

ஹோப்பில் டீம்

இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை கட்சி ரீதியாக எடுக்கப்பட தேவை உள்ளது.. இதற்காகவே, அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து நாளை, எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தப்பட உள்ளார்.. எனவே நாளைய தினம் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்ததாக தெரிகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வரும்சூழலில், அதிமுக, பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள மோதலை எப்படி எதிர்கொள்வது, பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+