சென்னை மின்சார ரயிலில் பேண்ட்டை திறந்து போதை ஆசாமி அநாகரிகச் செயல்.. பெண் பயணி வெளியிட்ட வீடியோ
சென்னை: சென்னையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த பெட்டியில் அதீத மதுபோதையில் இருந்த ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பொதுமக்களை ஆடிப்போக வைத்துள்ளது. சம்பவம் நடந்த போது, ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் உடனடியாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அந்த இளைஞரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் மின்சார ரயில் என்பது பல லட்சம் பேருக்கு முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. சென்னை , திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு சென்னை கடற்கரை, சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து சென்னையின் எந்த பகுதிக்கு மின்சார ரயிலில் போக முடியும் என்கிற நிலை இருக்கிறது.

மின்சார ரயில்களை பொறுத்தவரை சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கம், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கம் ஆகிய மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்சார ரயில்கள் சென்னைக்கு மட்டுமின்றி சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வேலைக்காகவும், கல்விக்காகவும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் நகரத்துக்கு வந்து செல்ல பேருதவியாக இருந்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து தாம்பரம் , செங்கல்பட்டு வழித்தடம் பிரதான வழித்தடமாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், சென்னையின் முக்கிய பகுதிகள் உள்ளன. தாம்பரம் கடற்கரை இடையே 10 நிமிடம் ஒரு முறை ரயில்கள் சென்று வருகின்றன.
பீக் அவர்ஸில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கூட ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களில் எப்போதுமே கூட்டமாகவே இருக்கும். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த பெட்டியில் அதீத மதுபோதையில் இருந்த ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்தக் காட்சிகளைப் பதிவு செய்து பெண் பயணி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சம்பவம் நடந்த போது, ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அழைப்பு கிடைக்காமல் போனதால், மாற்று வழியே இல்லாமல் 139 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்துள்ளாராம். அப்போது இந்தியில் பேசிய ஒருவரிடம், இந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் இணைக்குமாறும் அந்தப் பெண் பயணி கேட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு இணைக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாகவும் அந்த பெண் பயணி தனது பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications