நயன்தாரா சர்ச்சை.. வாடகை தாய் சட்டத்தை மீறினால்.. டாக்டருக்கு எத்தனை வருட சிறை தண்டனை தெரியுமா?
சென்னை: வாடகை தாய் சட்ட விதிகளை மீறியிருந்தால் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மகப்பேறு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவிட்டு பின்னர் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர்.
பின்னர் இருவரும் தங்கள் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

நயன்தாரா
அதில் தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பலருக்கு ஒரே குழப்பம், ஜூன் 9ஆம் தேதிதானே இருவருக்கும் திருமணம் நடந்தது, அதற்குள் எப்படி குழந்தை பிறப்பு என குழம்பிவிட்டனர்.

கர்ப்பம்
திருமண நாள் அன்று கூட நயன்தாரா கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில்தான் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது நயன்தாராவின் கருமுட்டையையும், விக்னேஷ் சிவனின் விந்தணுவையும் சேர்த்து கருவாக்கி அதை வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ளும் முறையேயாகும்.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தம்பதியில் யாருக்காவது இயற்கையாகவே கருத்தரிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்த முறையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிலும் ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாய் முறையை நாடும் தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் இருத்தல் வேண்டும்.

வணிக ரீதியில் வாடகைத் தாய்
வாடகைத் தாய் என்பது வணிக ரீதியில் இருத்தல் கூடாது. அதாவது சீரியல்களில் காட்டுவது போல் பணத்திற்காக வாடகைத் தாயாக மாறுவது கூடாது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியின் உறவினர்களில் ஒருவர் இதை செய்ய முன் வர வேண்டும். அந்த பெண்ணுக்கு 16 மாதங்களுக்கு காப்பீடு செலுத்த வேண்டும். மேலும் மருத்துவ செலவுகளை குழந்தை வேண்டும் என கூறும் தம்பதி ஏற்க வேண்டும்.

பணப்பரிமாற்றம்
இதை தவிர வேறு எந்த பணப்பரிமாற்றமும் இருவருக்குள்ளும் இருத்தல் கூடாது. இது போன்ற விதிமுறைகள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவகாரத்தில் பின்பற்றப்பட்டனவா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தின் மருத்துவர் ஜெயராணி கூறுகையில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன.

விதிமுறைகள்
இந்த விதிமுறைகளை மீறி ஒரு தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்க வைக்கும் சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஆனால் தம்பதிக்கு எந்தவிதமான தண்டனையும் கிடையாது. டாக்டர் இல்லாமல் இவர்களால் வாடகைத் தாய் முறையை மேற்கொள்ள முடியாது. எனவே டாக்டருக்குத்தான் இந்த தண்டனை கிடைக்கும். வாடகைத் தாய் என்பது வணிக ரீதியிலான பரிமாற்றமாக இருக்கக் கூடாது. குழந்தையை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை சம்பந்தப்பட்ட தம்பதியிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

தாய்ப்பால்
அந்த குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுப்பதை அனுமதிக்கவே மாட்டோம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கிகள் நிறைய உள்ளன. இங்கிருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாடகைத் தாயாக வருபவர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவே இருப்பர், மகளின் தாய், கணவரின் அண்ணன் மனைவி, பெண்ணின் அத்தை என எங்கள் மையத்தில் வந்து வாடகைத் தாயாக இருந்து அவர்களுடைய உறவினர்களுக்கு குழந்தை பெற்றுள்ளனர் என்றார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications