சென்னைவாசிகளே ஞாபகம் இருக்கா.. தேசிய பொது இயக்க அட்டை பயன்பாடு.. மெட்ரோ வெளியிட்ட புது தகவல்
சென்னை: தமிழகத்தில் பொது போக்குவரத்தில் தேசிய பொது இயக்க அட்டை பயன்பாடு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை குறைக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையில் ப்ரீபெய்டு பயண அட்டைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, புதிதாக வாகனங்களை நிறுத்தவும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயண அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தால் கடந்த 19ம் தேதி அறிவிக்கப்பட்டது.
சென்னையில் ரயில் நிலையம் மெட்ரோ ரயில், பஸ் ஆகியவற்றில் பயணிக்கும் பயனர்கள் பயண கட்டணத்தை செலுத்த ஏதுவாக, தேசிய பொது இயக்க அட்டை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டை சிங்கார சென்னை என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ அதிரடி: இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில், "பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஏப்ரல் 19ம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.
இந்த சிங்கார சென்னை அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மும்பை, பெங்களூரு, டெல்லி, கான்பூர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கப் பயன்படுத்தலாம். மும்பை மற்றும் கோவாவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் பேருந்து, புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம்.
ரீசார்ஜ்: இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2000 ரூபாய் சேமிக்க முடியும். புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைக்கான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும் ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதும், இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம் என்பதும், குறைந்தபட்ச KYC உடன் எளிதான இந்த அட்டையின் பதிவு செயல்முறை உள்ளது என்பதும் இந்த சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள் ஆகும். பயணிகள் தங்களுக்கான மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம்: அந்தவகையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.. மெட்ரோ ரயில் பயண பொது அட்டை பயன்பாடு, நடைமுறைக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில், இதற்கான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.. இந்த ஒரு வாரத்தில், சென்னையில் மட்டும் இந்த அட்டையை 900 பேர் பெற்று பயனடைந்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.. நாளடைவில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications