இன்று பொங்கல் பரிசு.. டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை.. தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு
சென்னை: டோக்கன் பெறாதவர்களுக்கு, இன்றைய தினம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இது பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இந்த பண்டிகையொட்டி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பொங்கல் பரிசு: முன்னதாக, பொங்கல் பரிசு தொகுப்புக்கான ரொக்க தொகையை பெறுவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துவோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. பின்னர் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே ரூ.1000, அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் தந்தது.
கட்டுப்பாடுகள்: ஆனால், கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் 1000 குடும்ப அட்டைதாரர்களை கொண்ட ஒவ்வொரு நியாயவிலை கடையிலும் சுமார் 400 முதல் 500 அட்டைதாரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.. அவர்களுக்கு பரிசுத் தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
அறிவிப்பு: இதுகுறித்து, 2 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படியே, இன்றைய தினம், ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications