மகா சிவராத்திரி 2025 எப்போது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 26 ஆம் தேதியா? 27 ஆம் தேதியா?
சென்னை: மகா சிவராத்திரி பூஜை எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வைபவம் பிப்ரவரி 26 ஆம் தேதியா இல்லை 27ஆம் தேதியா என்பதிலேயே சிலருக்கு குழப்பம் இருக்கிறது.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அற்புதமான நாளாக கருதப்படுகிறது.

சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.
இதில் யோக சிவராத்திரி என்பது யோகி தனக்கென ஒரு இரவை ஒதுக்கி சிவனை வழிபடுவது ஆகும். நித்திய சிவராத்திரி என்பது தினமும் வரும் சிவராத்திரியாகும். பக்ஷ சிவராத்திரி என்பது 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். மாச சிவராத்திரி மாதாமாதம் வரும். வருட சிவராத்திரி என்பது மகா சிவராத்திரியாகும்.
சிவனுக்குரிய இரவு என்பதாகும். மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.
இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 12.09 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12.59 மணி வரை அனுசரிக்கப்படுகிறது.
மகாசிவராத்திரியின் போது சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவார் என நம்பப்படுகிறது. சிவராத்திரியின் போது அனைத்து சிவன் கோயில்களிலும் 4 கால பூஜை நடைபெறும். காலையில் குளித்து முடித்துவிட்டு எதையும் உண்ணாமல் விரதம் இருந்து 4 கால பூஜைகள் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விரதத்தை கலைக்க வேண்டும்.
விரதத்தின் போது சிவ நாமத்தை சொல்ல வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. பழங்கள், தேன், நெய், இனிப்புகள், பால் உள்ளிட்டவைகளை சிவனுக்கு பக்தர்கள் படைப்பர்.
இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சிவனின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள். இரவு பக்தர்கள் கண்விழிப்பதால், கோயில்களில் சிவன் தொடர்பான நாடகங்கள், பரதநாட்டியங்கள் உள்ளிட்டவை நடைபெறும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications