விவசாயிகள் ஹேப்பி.. அக்கவுண்ட்டில் ரூ.2000 வந்ததா? பி.எம். கிசான் 17வது தவணை எப்போ தெரியுமா? அப்டேட்
சென்னை: பிரதமரின் பி.எம். கிசான் திட்டத்தில் 2000 ரூபாயை விவசாயிகள் பெற்றுவிட்டீர்களா? அவ்வாறு பலன் பெறாதவர்கள், இது தொடர்பாக எப்படி புகார் அளிக்கலாம் தெரியுமா?
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் என்று சொல்லப்படும் பி.எம். கிசான் திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு.

விவசாயிகள்: விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு தருகிறது.. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. அந்தவகையில், இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
16வது தவணை: 16வது தவணையை எதிர்நோக்கி விவசாயிகள் பல நாட்களாகவே காத்திருந்தனர். இறுதியில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்டது.. இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக, பிரதமர் கிசான் நிதி 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.. அதாவது பிப்ரவரியில் இருந்து பார்த்தால் வரும் ஜூன் மாதத்தில் 17வது தவணை வெளியாக வேண்டும். ஆனால் இப்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த முறை பி.எம்.கிசான் தவணை செலுத்துவது மிகவும் தாமதமாகலாம் என்கிறார்கள்.
புகார்கள்: இதனிடையே, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிலருக்கு 16வது தவணை பணமே இன்னும் வராமல் உள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை, அப்படி ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.
மேலும், பிஎம் கிசான் கட்டணமில்லா ஏண்களான, 18001155266, 155261 ஆகிய எண்களுக்கும் அழைத்து விவரங்களை பெறலாம். அதேபோல, [email protected] என்ற இந்த மெயில் ஐடியையும் தொடர்பு கொள்ளலாம்,
இணையதளம்: ஒருவேளை PM கிசான் யோஜனாவின் தவணை பணம் கிடைக்காதவர்கள் புகார் கொடுக்க விரும்பினால், [email protected]. and [email protected] என்ற இணையதளத்தில் புகார் தரலாம்.. அல்லது 011-24300606,155261 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1800-115-526 இலவச தொலைபேசி எண்ணிலோ நீங்கள் புகார் தலாம்.












Click it and Unblock the Notifications