கடலூரில் "காலை" வைத்ததுமே அதிர்ந்து போன திருமாவளவன்.. உதயசூரியனால் "உடைகிறதா" பானை.. சீறும் சிறுத்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற ஆர்வம் எகிறி வரும்நிலையில், அதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் சம்பந்தமாக, ஒரு ஸ்பெஷல் செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். அதாவது, திருவள்ளூர் தொகுதியில், இந்த முறை திருமாவளவன் போட்டியிட நிறையவே வாய்ப்புள்ளதாம். கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சி பொதுச்செயலர் ரவிகுமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்...

Do you know where Thirumavalavan is going to compete and What is happening in Cuddalore Chidambaram DMK

விழுப்புரம்: இதில், சிதம்பரம், விழுப்புரம் அருகருகே உள்ள தொகுதிகள் என்பதால், இருவருமே எம்பியாக இருந்தும், வட மாவட்டங்களில் கட்சியை வலுவாக கட்டமைக்க முடியவில்லை என்ற எண்ணம் உள்ளதாக தெரிகிறது.

திருமாவளவன்: அதுவும் இல்லாமல், ஏற்கனவே, 2 முறை சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார்... அந்த தொகுதியை தாண்டி, விசிக பரவலாக தமிழகமெங்கும் இன்னும் அழுத்தமாக கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகவே, இந்த முறை தொகுதி மாறி, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திட்டமிடுவதாக தகவல் வெளியானது.

அதேபோல, தனிச்சின்னத்தில் போட்டியிடவும் விசிக விரும்புவதாக தெரிகிறது.. கடந்த, 2019-ல் பானை சின்னத்தில் போட்டியிட்டு, திருமாவளவன், படாதபாடு பட்டுதான், வெற்றியை பெற்றிருந்தார். விழுப்புரம் தொகுதியில், அக்கட்சி பொதுச் செயலாளர் ரவிகுமார் மட்டும், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்ததால், இப்போதுவரை அவர் திமுக எம்பியாகவே கருதப்படுகிறார். அதனால்தான், பானை சின்னத்தையே இந்த முறை விசிக விரும்புவதாக தெரிகிறது.

தனிச்சின்னம்: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவையில் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் திமுக. கொறாடாவிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. . ஆனால், இதுவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தங்கள் கட்சியினரே அந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சரவையில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுவிட்டால், திமுகவுக்குதான் லாபமாக முடிந்துவிடும்.. அதனால்தான், பானை சின்னம் என்பதில் விசிக உறுதியாக இருப்பதாக, பல்வேறு தகவல்கள் அரசியல் களத்தில் கசிந்தபடியே உள்ளன.

சிதம்பரம்: இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் தொகுதிக்கு திருமாவளவன் சென்றிருந்தார்.. ஆனால், அந்த தொகுதியில், எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் ஆதரவு பெரிதாக இல்லையாம்.. "தேர்தல் வரவிருப்பதால் தொகுதி பக்கம் வந்திருக்கிறீர்களா?" என்கிற எதிர்மறை கேள்விகளும் தொகுதிக்குள் எதிரொலித்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இதே கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இதைக்கேட்டு அதிர்ந்து போன திருமாவளவன், "நான் தொகுதி மாறப்போவதாக வதந்திகளை பரப்புகிறார்கள். சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறேன்" என்று அழுத்தமாக சொல்ல தொடங்கியிருக்கிறாராம்..

கடலூர் அமைச்சர்கள்: இவர் இப்படி சொல்வதற்கு ஒரு பின்னணி காரணமும் இருக்கிறதாம்.. அதாவது, இந்த முறை சிதம்பரம் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என கடலூர் மாவட்ட அமைச்சர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் மா.செ.க்கள் அனைவரும் ஒரு மித்த குரலில் கட்சி தலைமையை வலியுறுத்த தயாராகி வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் இருக்கும் திமுகவினர், "திருமாவளவன் மீண்டும் இங்கு போட்டியிட்டால் தோற்றுப்போவார். மக்களின் அதிர்ப்தி அதிகளவில் தொகுதிக்குள் இருக்கிறது" என்று தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பி வருகிறார்களாம்.. இந்த விஷயம் திருமாவளவன் காதுக்கு எட்டியிருக்கிறது.

தீயாய் பரவும் வதந்தி: அதனால்தான், வதந்தி பரப்புகிறார்கள் என்று திருமாவளவன் வெளிப்படையாகவே சொல்லத்தொடங்கியுள்ளாராம்.. திமுக தலைமைக்கு இதெல்லாம் புரிய வைப்பதற்காகவே, பொதுவெளியில் பேசவும் தொடங்கியிருக்கிறாராம் திருமாவளவன்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+