தண்ணீரில் மிதந்துகிட்டே சாப்பிடலாம்! அதுவும் நம்ம சென்னையில்! மிதக்கும் உணவகத்தின் சிறப்புகள் என்ன?
சென்னை: சென்னையில் விரைவில் மிதக்கும் உணவகம் அறிமுகமாகிறது எந்த இடத்தில் தெரியுமா?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடலில் மிதக்கும் உணவகத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த மிதக்கும் உணவகத்திற்கான கப்பல் கட்டும் பணிகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. இந்த பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார். இந்த மிதக்கும் உணவகம் குறித்து செய்தி வந்ததிலிருந்தே மக்களுக்கு அதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அதுகுறித்த செய்திகளையும் அவர்கள் தேடி வருகிறார்கள். சென்னையில் உள்ள மக்களில் பலர் வார விடுமுறையை கழிக்க முட்டுக்காடு பகுதிக்கு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. ஒரு வேளை இந்த மிதக்கும் உணவகம் முட்டுக்காட்டில் செயல்படத் தொடங்கிவிட்டால் அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
தமிழக அரசு இந்த மிதக்கும் உணவகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த மிதவை கப்பலை உருவாக்கி வருகிறது. 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் இந்த மிதவை கப்பல் தயாராகி வருகிறது. இந்த கப்பல் இரண்டு அடுக்குகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் பயணித்துக் கொண்டே உணவருந்தலாம்.
கப்பலின் மேல் தளம் திறந்தவெளியாக இருக்கும். கீழே ஏசி வசதியுடன் கூடிய இருக்கைகள் இருக்கும். இந்த கப்பலில் சமையலறை, உணவு கிடங்கு, கழிவறை உள்ளிட்டவையும் இருக்கும். இதனால் சில உணவுளை கப்பலிலேயே சமைத்தும் சிலவற்றை வெளியில் இருந்து தயார் செய்து கொண்டு வந்தும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் கீழ்த்தளம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இதன் மேல் தளம் மட்டும் பாக்கியுள்ளது. எனவே இந்த கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டால் இந்த உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள், அவர்களை இந்த மிதக்கும் உணவகம் நிச்சயம் கவரும். இதற்கான கட்டணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால் பாதுகாப்புக்கு எந்த குறையும் இருக்காது.
இந்த உணவகத்தின் மதிப்பு ரூ 5 கோடி என்கிறார்கள். அது போல் கோவையிலும் மிதக்கும் உணவகம் கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது. இது போல் மிதக்கும் உணவகங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன தெரியுமா. உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகம் துபாயில் ரூஸ்டர் தோவில் இருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் 400 பேர் சாப்பிடலாம். அது போல் ஐரோப்பாவிலும் சீன நாட்டின் மிதக்கும் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. வியத்நாமிலும் உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications