கிளாம்பாக்கத்தை விடுங்க.. கோயம்பேட்டில் இருந்து இனி எந்த ஊர் பேருந்துகள் மட்டும் புறப்படும் தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்றும், கிளாம்பாக்கக்தில் இருந்தே தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து இனி எந்தந்த வழித்தட பேருந்துகள் மட்டும் புறப்படுகிறது என்பதை பார்ப்போம்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 30-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட மாட்டாது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் 30-ந் தேதி (இன்று) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்து உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்.

அதாவது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளும் இயக்கப்படும். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பின்வரும் வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை வருமாறு:
சென்னையில் இருந்து திருச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 118 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 18 பேருந்துகளும், சேலத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 66 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 17 பேருந்துகளும், விருத்தாசலத்திற்கு 30 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 6 பேருந்துகளும், கள்ளக்குறிச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 50 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 16 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதே போன்று, விழுப்புரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 59 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 16 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 52 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 14 பேருந்துகளும், சிதம்பரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 21 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நெய்வேலிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 46 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11 பேருந்துகளும், திண்டிவனம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 32 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன" என்றார். இதனிடையே அமைச்சர் அறிவித்தபடியே கிளாம்பாக்கத்தில் இருந்தே தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதனிடையே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகள் மற்றும் சேலம், கும்பக்கோணம் கோட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இன்று முதல் இயக்கப்படுகின்றன.
அதேநேரம் இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பூந்தமல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி, திருத்தணி, செய்யாறு உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications