2020-ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது தெரியுமா?
சென்னை: 2020ஆம் ஆண்டு ஒரு ட்வீட் அதிகமுறை ரீட்வீட் செய்யப்பட்டது என்றால் அது எது தெரியுமா அதை ட்விட்டர் நிறுவனமே வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பிதான்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த படம் மாஸ்டர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
சென்னை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நெய்வேலி படப்பிடிப்பின்போது அங்கு ஷூட்டிங் நடத்தக் கூடாது என மாஸ்டர் படக் குழுவினரை எதிர்த்து பாஜகவினர் போராடினர். எனினும் தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது.

விஜயிடம் விசாரணை
இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்பு செல்வனின் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. இதையடுத்து விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முற்பட்டனர்.

நெய்வேலி
அப்போதுதான் அவர் மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தார். அங்குச் சென்ற வருமான வரித் துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்த அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே அழைத்துச் சென்றனர். எனினும் அவரது வீட்டிலிருந்து எதையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றவில்லை என அவர்களே தெரிவித்தனர்.

வருமான வரித் துறை
பாஜகவினர் போராட்டம், விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு உள்ளிட்டவற்றால் பரபரப்பு அடைந்த நிலையில் ரசிகர்கள் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த விஜயை பார்க்கச் சென்றனர். நாள்தோறும் விஜயை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிக்கு படை எடுத்தனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்
இதையடுத்து ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திக்குமுக்காடிய விஜய் படப்பிடிப்பின் கடைசி நாளன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பஸ் மீது ஏறி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

ரீட்வீட்
அதில் நன்றி நெய்வேலி என குறிப்பிட்டு ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதை ரசிகர்கள் ரீட்வீட் செய்ததால் 2020ஆம் ஆண்டில் மிகவும் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக அது பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பன்மடங்கு மகிழ்ச்சி அடைந்துவிட்டார்கள்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்?












Click it and Unblock the Notifications