கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்... நினைவிருக்கா? பக்கத்திலேயே நடக்கும் பெரிய மாற்றம்.. தொடங்கிய பணிகள்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட் காலி செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் என்ன திட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான கட்டுமானம் அங்கே விரைவில் தொடங்க உள்ளதாம்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் இரண்டும் மூடப்பட்டு உள்ளது. இவை இருக்கும் இடத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னைக்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் எல்லா இடங்களிலும் நிற்க கடந்த வாரத்தில் இருந்து அனுமதிக்கப்படுவது இல்லை. போரூர் டோல்கேட் உட்பட 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டுமே.. கோயம்பேடு, சின்னமலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக ஈசிஆர் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இவை மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி செங்கல்பட்டு, பெருங்களத்தூர் ரூட் எடுக்கும் வாகனங்கள் எல்லாம் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள, இறக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
எப்படி இயங்கும்: இந்த பேருந்துகள் கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகிறது . ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
மார்க்கெட் பணிகள் தொடக்கம்: ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் உள்ள இடத்தில் என்ன திட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இங்கே சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் 7 ஏக்கர் பூங்கா அமைக்க ஆணையம் (சிஎம்டிஏ) டெண்டர் எடுத்துள்ளது. மிகப்பெரிய பூங்காவை இங்கே அமைக்க உள்ளனர். பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் பூங்கா போல பிரம்மாண்டமாக பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த பூங்காவிற்கான கட்டுமான பணிகள் இந்த வாரமே தொடங்க உள்ளதாம். தற்போது உள்ள மார்க்கெட்டை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மொத்தமாக மார்கெட் இடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications