பிரபல நடிகைக்கு "தீர்த்தம்" தந்த பூசாரி.. மயங்கியதும் கர்ப்பம்! புதுசா யாரந்த விஐபி?
சென்னை: தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கோயில் பூசாரி, தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக நடிகை ஒருவர் போலீசுக்கு ஓடியிருக்கிறார். என்ன நடந்தது சென்னையில்?
சென்னை விருகம்பாக்கம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது பெண் புகார் தந்துள்ளார்.. அந்த புகார் குறித்து போலீசார் சொன்னதாவது

கோவையை சேர்ந்தவர் தேவி.. சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.. எனவே உறவினர்கள் கட்டுப்பாட்டில் தேவி வளர்ந்து வந்துள்ளார்.. இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார். சினிமா நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
தேவி: இதற்காக, கடந்த 2021ல் சென்னை சாலிகிராமம் காந்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை தேடினார்.. ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது. பிறகு சில படங்களிலும் நடித்தார்.. தேவிக்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு.. எனவே, பாரிமுனையில் உள்ள அந்த பிரபலமான அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
அப்படித்தான், ஒரு நாள் கோயிலுக்கு போனபோது, பக்தர்கள் வரிசையில் தேவி நின்றிருந்தபோது, அங்கிருந்த குருக்கள் கார்த்திக் என்பவர், தேவியிடம், "உங்களை எங்கியோ பார்த்தது போல் இருக்கிறதே? என்று கேட்டிருக்கிறார். அதற்கு தேவியும், நான் டிவியில் வேலை பார்ப்பதால், என்னை அடிக்கடி டிவியில் பார்த்திருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
போன்நம்பர்: பிறகு, அந்த குருக்கள், தேவியை கோயில் கருவறைக்குள்ளேயே அழைத்து சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்துள்ளார். அப்போது தேவியிடம், குருக்கள் தன்னுடைய பெயர் கார்த்திக் முனுசாமி என்று சொல்லி, தேவியின் போன் நம்பரை வாங்கி கொண்டார்.
பிறகு தேவியின் வாட்ஸ்அப்புக்கு, சொற்பொழிவுகளையும், கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அடிக்கடி குருக்கள் கார்த்திக் அனுப்பி வந்தநிலையில், அடிக்கடி 2 பேரும் போனில் பேசி வந்திருக்கிறார்கள்.
கோயில் குருக்கள்: ஒருநாள் அந்த கோயிலுக்கு சென்ற போது, தேவியை கோயில் குருக்களான கார்த்திக் முனுசாமி, உங்கள் வீட்டின் வழியாகத்தான் செல்கிறேன், உங்களை வீட்டில் விட்டுவிட்டு செல்கிறேன் என்று தன்னுடைய பென்ஸ் காரில் தேவியை அழைத்து சென்றிருக்கிறார்.
வீட்டிற்கு வந்து காரில் இறங்கியதும், இவ்வளவு தூரம் வந்துட்டேன், வீட்டிற்குள் கூப்பிட மாட்டீங்களா? என்று தேவியிடம் கார்த்திக் கேட்டுள்ளார். உடனே தேவியும், உள்ளே வாங்க என்று சொல்லி கார்த்திக்கை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது குருக்கள் கார்த்திக் முனுசாமி "அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்" என்று தேவியிடம் தந்து குடிக்க சொல்லி உள்ளார். அந்த தீர்த்தத்தை தேவியும் வாங்கி குடித்துள்ளார். கொஞ்ச நேரத்தில் தேவிக்கு மயக்கம் வந்துள்ளது.
படுக்கைஅறை: பிறகு வீட்டின் பெட்ரூமுக்கு அழைத்து சென்று, தேவியின் ஆடைகளை களைந்து உல்லாசமாக இருந்துவிட்டு கார்த்திக் சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து தேவி கண் விழித்துப்பார்த்தபோது, படுக்கை அறையில் நிர்வாணமான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனே கார்த்திக்குக்கு போன் செய்து இதை பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திக், நேரடியாக கிளம்பி தேவி வீட்டிற்கு வந்துவிட்டார்.. "உன் அழகில் மயங்கி நான் இப்படி தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு.. என் மனைவியுடன் எனக்கு தாம்பத்திய உறவு இல்லை, உன்னுடைய ஜாதகமும், என்னுடைய ஜாதகமும் ஒன்று சேர்ந்தால் பலனளிக்கும், நாம் 2 பேரும் கல்யாணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம்" என்று சொல்லி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.
காளிகாம்பாள்: பெற்றோர் இல்லாமல் உறவினரிடம் வளர்ந்த தேவியோ, வேறு வழியின்றி கார்த்திக்கை கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, தேவியின் வீட்டிற்கு குருக்கள் கார்த்திக் அடிக்கடி வந்து ஜாலியாக இருந்து வந்துள்ளார். இதனால் தேவி கர்ப்பமானார். பிறகு கார்த்திக், காளிகாம்பாள் கோயிலில் தாலி என்று சொல்லி, தேவியை வீட்டிலேயே வைத்து கல்யாணம் செய்து கொண்டார். அப்போது முதல் 2 பேரும் தம்பதி போல வாழ்ந்து வந்தனர்.
தேவி கர்ப்பமாக இருந்ததால், அது ஜாதகப்படி சரியில்லை என்று சொல்லி, கடந்த 25.2.2023 அன்று வடபழனியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். பிறகு ஒருநாள், தன்னுடைய விஐபி நண்பர் என்று சொல்லி, தேவி வீட்டிற்கு ஒருவரை காரில் அழைத்து வந்துள்ளார். பிறகு ஒரு அவசர வேலை இருக்கிறது, நான் வரும்வரை என்னுடைய விஐபி நண்பருடன் பேசி கொண்டு இரு என்று சொல்லி கார்த்திக் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
விஐபி: சிறிது நேரத்தில் அந்த விஐபி நபர், தேவிக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, கார்த்திக்குக்கு போனை போட்டு நடந்த சம்பவத்தை சொல்லவும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று சொல்லி தேவியை சமாதானம் செய்துள்ளார்.
ஆனால், அடுத்த நாளே, "என்னுடைய விஐபி நண்பருடன் நீ இணக்கமாக போயிருந்தால் எனக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் தெரியுமா?" என்று சொல்லி தேவியை சரமாரி அடித்து வந்துள்ளார்..
கார்த்திக்: இப்படிப்பட்ட சூழலில், ஒருநாள், கார்த்திக்கின் செல்போனை எடுத்து தேவி பார்த்தபோது, பல பெண்களுடன் கார்த்திக் உல்லாசமாக இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடைய போட்டோக்களை நிறைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்ததை பார்த்து தேவி அதிர்ந்து போனார்.
இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டதற்கு, தேவியை கடுமையாக தாக்கிவிட்டு செல்போனை நொறுக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தேவி, அதே பாரிமுனை கோயிலுக்கு சென்று, இன்னொரு குருக்களான காளிதாஸ் என்பவரிடம் சொல்லி முறையிட்டுள்ளார்.. அதற்கு அவர், "கார்த்திக் என்னுடைய அண்ணன் மகன்தான். அவன் எப்போதும் இப்படித்தான். அவனுடன் நீ ஒன்றாக இருந்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டுள்ளார்.
அதிர்ச்சி: இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தார் தேவி.. இப்படிப்பட்ட சூழலில், கார்த்திக்கின் கள்ளக்காதலி சுவேதா என்பவர் சந்தித்து பேசியிருக்கிறார்.. "என்னுடன் வந்துவிட்டால், சென்னையில் உனக்கு சம்பாதிக்க வழி செய்கிறேன்" என்று சொல்லி பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்துள்ளார்.
இதனால் மேலும் மனமுடைந்த தேவி, கார்த்திக்கின் மனைவி பிரியாவிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்ட பிரியா, என் கணவர் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, போலீசுக்கும் போகக்கூடாது" என்று ஆட்களை வைத்து மிரட்டியிருக்கிறார். இதற்கு பிறகுதான், உயிருக்கு பயந்துபோன தேவி, உரிய ஆதாரங்களுடன் இணை கமிஷனரிடம் நேரில் வந்து புகார் அளித்திருக்கிறார்" என்கிறது போலீஸ் தரப்பு.
விருகம்பாக்கம் : இறுதியில், நடிகை தேவி அளித்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் மகளிர் போலீசாரும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்..
அதில், கோயில் குருக்கள் கார்த்திக், தேவியை போலவே பல பெண்களுடன் ஒன்றாக இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து மிரட்டியது உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து, கார்த்திக் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. கார்த்திக்கிடம் விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்களாம்... கார்த்திக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், யார் என்ற விசாரணையையும் ஆரம்பித்துள்ளனர்!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications