Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் காமவெறி பிடித்து அலைந்த பிரபல சாமியார்.. லேடீஸ் ஹாஸ்டலில் அசிங்கம்.. தூக்கிய டெல்லி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவிகளுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி தொந்தரவுகளை செய்து கொண்டிருந்த பிரபல சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. டெல்லியில் செயல்பட்டு வரும் பிரபல கல்வி நிறுவனத்தின் மேலாளராக உள்ள இந்த சாமியார் இதுவரை தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.. இதையடுத்து கைதான நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

டெல்லியில் வசந்த்கஞ்ச் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம்.. இது சிருங்கேரியில் செயல்படும் சாரதா மடத்துடன் தொடர்புடையதாகும்.

delhi ashram Hotel

டெல்லியில் மிக பிரபலமாக செயல்பட்டு வரும் இந்த ஆன்மீக நிறுவனத்தில் ஏராளமானோர் கல்வி கற்று வருகிறார்கள்.. இந்த ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் படிப்பில், EWS உதவித்தொகையில் PGDM என்று சொல்லக்கூடிய மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ படிப்புகளை மாணவிகள் பலர் படித்து வருகிறார்கள்.

ஆபாச மெசெஜ்கள்

இந்த நிறுவனத்தின் மேனேஜராக இருப்பவர் சைத்தியானந்த சரஸ்வதி.. இவரது நிஜப்பெயர் பார்த்தசாரதி..இந்த சாமியார் 30 மாணவிகளிடம் பாலியல் சேட்டை தந்திருப்பதாக புகார் கிளம்பியது.. அதிலும் 17 மாணவிகளுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.. அத்துடன் தேவையற்ற டார்ச்சர்களையும் தந்ததால், சம்பந்தப்பட்ட மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்..

எனவே மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஆசிரமத்திலிருந்த ஆசிரியர்களிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் அந்த புகாரை ஆசிரியர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம்.. சாமியார் சொல்வது போலவே நடந்துக் கொள்ளுங்கள், அவர் கேட்பதை நீங்கள் தந்துவிடுங்கள்" என்று சொல்லி பாதிக்கப்பட்ட மாணவிகளையே நிர்ப்பந்தித்தார்களாம்.

நம்பர் பிளேட்

இதற்கு பிறகுதான், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது.. உடனடியாக போலீசார் ஆசிரமத்தில் நுழைந்துள்ளனர்.. ஆனால், அங்கிருந்த சாமியார் மாயமாகிவிட்டார்.. பிறகு ஆசிரமத்தை சோதனை செய்தபோது, கார் ஒன்றை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்..

முக்கிய அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் நம்பர் பிளேட் அந்த காரில் பொருத்தப்பட்டிருந்ததால், உடனே அந்த நம்பரை வைத்து போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், அந்த கார் நம்பரும் போலி என்று தெரியவந்தது... உயர் அதிகாரிகள் பயன்படுத்தம் நம்பர் பிளேட்டை காரில் பொருத்தி, சாமியார் பயன்படுத்தி வந்துள்ளதும் அம்பலமானது.

சாமியார் 8 கோடி சொத்து

இதையடுத்து, சாமியார் சைதன்யானந்த சரஸ்வதிக்கு தொடர்புடைய ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளை காவல்துறை முடக்கியது. அத்துடன் எதிராக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடும் பணியையும் முடுக்கிவிட்டனர்..

இதற்காக ஆசிரமத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், சாமியார் தங்கியிருந்த அறை, ஆசிரம வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பல சோதனைகளை போலீசார் மேற்கொண்டனர்.. இதனிடையே, மாணவிகள் தொடுத்த பாலியல் புகாரையடுத்து, மடத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சாமியாரை சாரதா பீடம் நீக்கி உத்தரவிட்டது. .

ஆக்ரா ஓட்டலில் சிக்கினார்

இந்நிலையில், தலைமறைவாக இருந்த சாமியாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.. ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் மறைந்திருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை டெல்லி போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்..

தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.. இதையடுத்து, சாமியாரிடம் விரைவில் விசாரணை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த சாமியார் தெரியுமா?

சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி ஒடிசாவை சேர்ந்தவர்.. இந்த ஆசிரமத்தில் 12 ஆண்டுகளாக வசித்து வருவதால், ஆசிரமத்தையே பராமரித்து நடத்தும் பொறுப்பும் தரப்பட்டுள்ளது..

ஏற்கனவே நிறைய பாலியல் புகார்களில் சிக்கியவர் இந்த பார்த்தசாரதி.. கடந்த 2009ல், இந்த சாமியார் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை கேஸ் பதிவாகியிருக்கிறது.. 2016லிலும், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் தந்துள்ளார்.. இப்போது 17 மாணவிகள் சாமியார் மீது பாலியல் புகார் தந்துவிட்டனர்.

"உன்னை ஸ்டார் ஆக்குறேன்.. ஃபாரின் டிரிப் போகலாம்.. என்று சொல்லி தன்னுடைய அறைக்கு இரவில் மாணவிகளை வர வற்புறுத்தியிருக்கிறார்.. அத்துடன் உடல் ரீதியாகவும் தொடர்பு கொள்ள அப்பெண்களை கட்டாயப்படுத்தியிருக்கிறார்..

லேடீஸ் ஹாஸ்டலில் ரகசிய கேமராக்களையும் வைத்து, மாணவிகளை கண்காணித்துள்ளார்.. இதற்கெல்லாம் பெண் வார்டன்களும், நிர்வாக ஊழியர்களும் சாமியாருக்கு உதவி செய்திருக்கிறார்கள்.. இவைகளை எல்லாம் மாணவிகள் தங்கள் புகார்களில் சொல்லவும்தான், வசமாக சிக்கியுள்ளார் பார்த்தசாரதி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+