"வர்றாரு இருங்க".. லியோனி சொன்னதுமே டக்கென திரும்பிய அறிவாலயம்.. ஸ்டாலின் கை காட்டும் "தலைவர்" அவரா?
சென்னை: தேசிய அரசியலையே நிர்ணயிக்க போவது தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் என்ற பூரிப்பு முழக்கங்கள் திமுகவை வலம் வந்து கொண்டிருக்கின்றன.. பிரதமர் வேட்பாளராக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என்றும், நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை உடன்பிறப்புகள் உதிர்க்க துவங்கி உள்ளனர்.
பாஜகவுக்கு எதிரான மாற்று அரசியலை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்தி வருவதால், தேசிய அளவில் கவனிக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்..
கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியுள்ளனர்..

பாஜக எதிர்ப்பு
எனினும் இதில் இதுவரை பெரிய பலன் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

காய் நகர்த்தல்
அதுமட்டுமல்ல, அந்த பக்கம் மம்தா, இந்த பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு நடுவில் பினராய் என மாநில வாரியான ஆதரவையும், நல்லிணக்கத்தையும் ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார்.. பிரதமர் யார் என்பதைவிட, பிரதமராக யார் வந்துவிடக்கூடாது என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தி, பாஜகவை வீழ்த்தும் கூட்டணியை வலுப்படுத்தவும் நினைக்கிறார்.. ஆனால், 2018 லேயே முதலாவதாக முந்திக்கொண்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் ஸ்டாலின்தான்.. அதேபோல, கடந்த வருடம் நடந்த தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

நேஷனல் பாலிட்டிக்ஸ்
அந்தவகையில், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் தீவிரமாக ஸ்டாலின் உள்ளார் என்றாலும், மம்தாவை போல், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றவர்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வரவில்லை என்றால், தன்னுடைய தலைமையை ஏற்க வைக்கும் திட்டம் ஒன்றையும் வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு, ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் கவனம் ஸ்டாலின் மீது குவிவதை தவிர்க்க முடியாததையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

ஃபரூக் அதிரடி
சில நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவர் பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள், "ஸ்டாலின் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?" என்று கேட்டார்கள்.. அதற்கு ஃபரூக் அப்துல்லா, ''அவர் ஏன் பிரதமராகக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?'' என்று திருப்பி கேட்டார்... அப்படியானால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொண்டாரா? என்று அடுத்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு ஃபரூக் அப்துல்லா, ''எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன்.. இந்த நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியிருந்ததை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

விலாங்கு மீன்
தேசிய தலைவர்களே இவ்வாறு சொல்லிவரும்போது, ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என்று திமுகவினரே அதற்கு மேல் பூரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. சில நாட்களுக்கு முன்பு, நம் "ஒன் இந்தியா" தமிழுக்கு திமுக எம்பி ஆ.ராசா ஒரு சிறப்பு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்தார்.. இதைதான் அன்று டிஆர் பாலுவும் குறிப்பிட்டிருந்தார்..

மாடல் ஆட்சி
"திராவிட மாடல் இந்தியாவுக்கான மாடல். நமது கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் பாங்கு திமுக தலைவரிடம் உள்ளது. இதை தேசியக் கட்சி தலைவர்கள் உணர்ந்து செல்ல வேண்டும்" என தங்கள் கட்சியின் தலைமை அகில இந்திய அரசியலுக்கு தலைமை ஏற்க தயாராகிவிட்டதை சூசகமாக உணர்த்தியிருந்தார் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு. இதே கோரிக்கையை இன்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், திமுக பேச்சாளருமான லியோனியும் சொல்லியுள்ளார்..

லியோனி
திமுக விழா ஒன்றில் பேசிய லியோனி, "என்ன பேசறதுன்னு தெரியாமலேயே டென்ஷன் ஆகிறாரு பாஜக தலைவர்.. கொஞ்சம்கூட, அனுபவம் இல்லாதவர்கிட்ட தலைவர் பதவியை தந்துள்ளார்களே.. போலீஸ் அதிகாரியாம்.. பாஜக தலைவர் அவர்களே, சிங்கம் முன்னாடி மோதினால், ஒருசிறு ஆட்டுக்குட்டிதான் அழிவு... ஒரு நல்ல ஆட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்டவர்கள், வறியவர்கள், இந்த உலகத்தில் கவனிக்கப்படாதவர்களாக யார் இருக்கிறார்களோ, அவர்களை உயர்த்தி பார்ப்பது இந்த ஆட்சிதான். இதைதான் பேரறிஞர் அண்ணா சொன்னார், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று.. தலைவர் ஸ்டாலின், யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் இந்த நாட்டின் பிரதமராக வருவார்.. தேசிய அரசியலை உருவாக்கக்கூடிய தலைவராக இருக்க போகிறவர் ஸ்டாலின்தான்" என்றார் லியோனி...!!
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications