சென்னை அயனாவரம் பெண்.. தலைக்கேறிய "மோகம்".. மாப்ளையிடம் சொக்கிபோய்.. போலீஸ் அலர்ட் பண்றது இதுக்குதான்
சென்னை: அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்காக, ஆசை ஆசையா காத்திருந்தார் அயனாவரம் பெண்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
அந்த இளம்பெண் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர்.. திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. இதனால், 2வது திருமணத்துக்கு தயாரானார். இதற்காக திருமண இணையதள தகவல் மையத்தில், தன்னுடைய விவரங்களை பதிவு செய்ததுடன், போன் நம்பரையும் பதிவிட்டிருந்தார்.

அலெக்ஸ்: ஒருநாள், அவருடைய செல்போனுக்கு அமெரிக்காவில் இருந்து அழைப்பு வந்திருந்தது.. அவர் ஒரு டாக்டர்.. தன்னுடைய பெயர் அலெக்ஸ் என்று சொன்னார்.. டாக்டர் என்றதுமே, இளம்பெண் ஆர்வமாகிவிட்டார்.. அதிலும் அமெரிக்கா மாப்பிள்ளை என்றதும், மோகம் தலைக்கேறிவிட்டது. அதற்கேற்றவாறு, அமெரிக்க மாப்பிள்ளையும் தேனாக பேசினார்.. அந்த பேச்சில், மயங்கிவிட்டார் அயனாவரம் பெண்..
போதாக்குறைக்கு நிறைய காஸ்ட்லி பொருட்களையும், கிப்ட்டாக அனுப்பி வைப்பதாக சொல்லியிருந்தார். அத்துடன், அந்த காதல் பரிசுகளின் போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார். இந்த போட்டோக்களை பார்த்ததுமே, திக்குமுக்காடி போய்விட்டார் அயனாவரம் பெண்.. மணந்தால் இந்த மாப்பிள்ளையைதான் மணப்பது, என்று கறாராக முடிவெடுத்தார்.
கொரியர் நிறுவனம்: இந்த நிலையில், அமெரிக்க மாப்பிள்ளை சொன்னபடியே, பார்சல் வந்துள்ளது.. கொரியர் நிறுவனத்திலிருந்து பெண்ணிடம் பேசியிருக்கிறார்கள்.. "உங்கள் பெயரில் பார்சல் ஒன்று மும்பைக்கு வந்துள்ளது..
ஆனால், அந்த பார்சலை உங்களுக்கு அனுப்பி வைக்க சேவை கட்டணம் செலுத்த வேண்டும்" என்று சொல்லி உள்ளனர். இந்த பெண்ணும், அந்த கொரியர் கம்பெனியின், வங்கி கணக்கிற்கு சேவை கட்டணத்தை அனுப்பி வைத்தார்.. பிறகு சிறிது நேரத்தில், சுங்கத்துறையில் இருந்து பேசிய ஒருவர், சுங்க கட்டணத்தை அனுப்புங்கள், பார்சலை அனுப்பி வைக்கிறோம் என்றார்.. உடனே அயனாவரம் பெண்ணும், அவர்கள் கேட்ட சுங்க கட்டணத்தையும் அனுப்பி வைத்தார்.
வருமான வரித்துறை: இப்போது, வருமானவரித்துறையிலிருந்து பெண்ணுக்கு போன் வந்தது.. வருமான வரியை கட்டினால்தான், பார்சலை தருவோம் என்றார்கள்.. இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை பெயரிலும் அயனாவரம் பெண்ணுக்கு போன் வந்தன.. ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி இதை நீங்கள் அனுப்பாவிட்டால், உங்களுக்கு பார்சல் அனுப்பியவர், ஜெயிலுக்கு போவார் என்றார்கள்..

இதனால் அதிர்ச்சி அடைந்த அயனாவரம் பெண், வருமானவரித்துறை + அமலாக்கத்துறை இரு தரப்பிலும் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தார். ஆக மொத்தம் ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை, வெறும் கட்டணமாக மட்டுமே செலுத்தியிருக்கிறார். ஆனால், அந்த காதல் பரிசுகள் எதுவுமே வீட்டுக்கு வந்துசேரவில்லை.. அமெரிக்க மாப்பிள்ளையின் போனும் அதற்கு பிறகு வரவில்லை.. இந்த பெண், அமெரிக்க மாப்பிள்ளைக்கு போனை போட்டால், ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.
சைபர் கிரைம்: கடைசியில்தான், ஏமாந்து போய்விட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். பிறகு, சென்னை கமிஷனர் ஆபீசுக்கு ஓடியிருக்கிறார்.. புகாரையும் தந்திருக்கிறார்.. இதையடுத்து, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரத்தோர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார், இது தொடர்பான விசாரணையில் இறங்கினார்கள்.
அப்போதுதான் தெரிந்தது, அந்த மாப்பிள்ளை, டாக்டரே கிடையாதாம் நைஜீரியாவை சேர்ந்தவராம்.. அமெரிக்காவில் இருந்து பேசவில்லையாம்.. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து போனில் பேசி ஏமாற்றியிருக்கிறார்.. அவரது பெயர் சுக்வுமேகா இகெடினோபி, வயது 33 என்பது தெரியவந்துள்ளது.
புதுமாப்பிள்ளை: இதற்கு பிறகு, நம்முடைய போலீசார், நேரடியாகவே உத்தரபிரதேசம் சென்று, அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இப்போது புதுமாப்பிள்ளை, கல்யாணம் ஆகாமலேயே "மாமியார்" வீட்டுக்கு வந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications