Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகையை ஞாபகம் இருக்கா? அன்று நள்ளிரவில் அலறல்.. இப்ப மகனால் கதறல்.. என்னாது எலி கடிச்சிருச்சா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பாபிலோனோவின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், தன்னுடைய மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பேயில்லை என்று கண்ணீர் மல்க சொல்கிறார் நடிகை மாயா.

நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்கி மர்மமான முறையில் விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இறந்துகிடந்தார்.. தசரதாபுரம் 8ஆவது காலனியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கண்கள் பிதுங்கிய நிலையிலும், தலையில் ரத்தக் காயங்களும் கிடந்தன.. கையில் அறுப்பு காயங்களும் இருந்திருக்கின்றன..

Do you know who is this Famous Actress Maya and what did she say about his son Vignesh

திடீர் மரணம்: ஆனால், இவர் கிடந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. அநேகமாக அவர் உயிரிழந்து 2 நாளாகியிருக்கும் என்றார்கள்.. அவருடைய அம்மா மாயா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.. யாராவது கொலை செய்திருப்பார்களா? என்றும் தெரியவில்லை. ஆனால், கதவு உள்பக்கமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்..

சம்பவத்தன்று, மதுபோதையில் படுக்கையிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம், நாக்கு வறண்டதால் கண்கள் பிதுங்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், விக்கியின் இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும்.

Do you know who is this Famous Actress Maya and what did she say about his son Vignesh

நடிகை மாயா: இப்படிப்பட்ட சூழலில், விக்கியின் அம்மா, மாயா கண்ணீர் பேட்டி ஒன்றை தந்துள்ளார். மாயா ஒரு கவர்ச்சி நடிகை ஆவார்.. பாபிலோனாவின் அத்தையும் கூட.

கடந்த 2014-ம் ஆண்டு, மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, "அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்' என கோஷமிட்டபடியே சாலையின் நடுவில் சென்று மாயா படுத்து கொண்டு, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் மாயா. தன் மகனின் இறப்பு குறித்து மாயா சொன்னதாவது:

ஹார்ட் அட்டாக்: "சில பிரச்சினைகள் காரணமாக விக்கி அதிகமாக குடித்து கொண்டிருந்தான். அது வேண்டாம் என்று நான் எவ்வளவோ அட்வைஸ் செய்தேன்.. ஆனாலும் கேட்கவில்லை.. அதிகமாக குடித்ததால் என் மகனுக்கு உண்மையிலேயே ஹார்ட் அட்டாக் வந்ததா? கூட இருந்தவர்களே ஏதாவது செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

என் மகனின் கண், கைகளை எலி தின்றுவிட்டது... அவன் எப்போது இறந்தான் என்றே தெரியவில்லை.. என் மகனை ரெளடி என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்... அவன் நிஜமாகவே தைரியமானவன்.. தற்கொலையை நிச்சயம் அவன் செய்து கொண்டிருக்க மாட்டான்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உண்மை தெரிய வரும்" என்றார்.

யாரிந்த விக்கி: உயிரிழந்த விக்கியை பொறுத்தவரை, மது, கஞ்சாவுக்கு அடிமையானவர் என்கிறார்கள்.. மேலும், நிறைய குற்ற வழக்குகளிலும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது.. இந்த பின்னணியில்தான், கடந்த 2020ல், விக்னேஷை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.. இந்த தாக்குதலில், 10 இடங்களில் வெட்டுப்பட்ட விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றிருக்கிறார்..

இந்த சம்பவம் நடந்த அடுத்த மாதமே, மாயாவின் கார் கண்ணாடியை யாரோ அடித்து நொறுக்கியிருந்தார்கள். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வேகன் ஆர் காரை, நள்ளிரவில் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் மர்மநபர்கள்.. இதைப்பார்த்து அலறிய மாயா, செய்வதறியாமல், உடனடியாக விரும்பாக்கம் ஸ்டேஷனிலும் புகார் தந்திருந்தார். விக்கி சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக இப்படி செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதேபோல, இன்னமும்கூட நிறைய கேஸ்கள் விக்கி மீது நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அதனால்தான், விருகம்பாக்கம் போலீஸார் இவரை "போக்கிரி" பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

Do you know who is this Famous Actress Maya and what did she say about his son Vignesh

தகராறு: கடந்த 2018-ல்கூட ஒரு சம்பவம் நடந்தது.. அன்றைய தினம் இரவு, போகிற வருகிற வண்டிகளை மறித்து ஒருவர் ரோட்டில் ரகளை செய்வதாக கிடைத்துள்ளது.. இதனால் போலீசார் அந்த குறிப்பிட்ட தெருவுக்குள் போலீசார் நுழைந்தபோது, விக்கி குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்..

அதனால், ஸ்டேஷனுக்கு வரும்படி அவரை அழைக்கவும், டென்ஷன் ஆகிவிட்ட விக்கி, "ஓ.. என் மேலயே கை வைக்கிறியா... என்னையே பிடிக்கிறியா" என்று சொல்லி ரோந்து வாகன டிரைவர் சங்கரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.

இது குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு உடனடியாக தகவல் சொல்லப்படவும், தனிப்படை போலீசார் விரைந்து வந்து விக்கியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவமும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+