சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சர்ப்ரைஸ்".. எகிறி அடிக்கும் ஓபிஎஸ்.. ஒரே கல்லுல "டபுள் மாங்காய்".. எடப்பாடியே எதிர்பார்க்கலயே

செந்தில்முருகனை வேட்பாளராக ஓபிஎஸ் டீம் அறிவிக்க காரணம் என்ன தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு லேசாக கலங்கி போயுள்ளதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, ஓபிஎஸ் அதுகுறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.. ஆனால், ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் ஒருசில கருத்துக்களை எடுத்து சொன்னதாக தெரிகிறது.

"ஒருவேளை தமாகாவின் யுவராஜா போட்டியிட நேர்ந்தால், ஆதரவை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்றார்களாம்..

எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன? எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன?

 முதலியார்

முதலியார்

அதுமட்டுமல்ல, கவுண்டர் சமுதாயம் அல்லாத ஒரு வேட்பாளரை அதாவது "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் நிறுத்தலாம்.. காரணம், கொங்கு சமுதாய ஓட்டுக்கள் என்பது எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்று, வெற்றியை சுபலமாக்கிவிடலாம் என்றும் எடுத்து சொன்னார்களாம்.. இதற்கு பிறகே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் அறிவித்தாராம்.. ஆனாலும், வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸ் அறிவிக்காமலேயே இருந்தார்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகவே இத்தனை நாளும் காத்திருந்தார்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

அதேசமயம், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பமும் ஓபிஎஸ் தரப்பில் ஓடிக் கொண்டிருந்தது.. ஒவ்வொருவருக்கும், ஃபோன் போட்டு, "போட்டியிடுங்கள்" என சொல்லி வந்தாலும், யாரும் அதற்கு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. டைரக்டர் பாக்யராஜை கூட ஓபிஎஸ் தரப்பினர் அணுகிய நிலையில், அதற்கு பாக்யராஜ் இணங்கவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில்தான், நேற்றைய தினம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளர் செந்தில்முருகனை அறிவித்தார்.. வேட்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 சாதி ஓட்டு

சாதி ஓட்டு

இன்னும் திருமணமாகவில்லை.. 42 வயதாகிறது.. எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில்முருகன் லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.. கொரோனோ உச்சத்தில் இருந்தபோது, இந்தியா திரும்பிய நிலையில், வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். அதிமுகவில் இணைந்து செயல்பணியாற்றிய நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் வெடிக்கவும், ஓபிஎஸ் பக்கம் தாவி தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.. ஆனால், செந்தில் முருகன் கட்சியில் பெரிய அளவில் அறியப்படாத நபராக இருந்தபோதிலும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவராம்.. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் முதலியார்கள்...

 எடப்பாடி ஜெர்க்

எடப்பாடி ஜெர்க்

ஏற்கனவே அதிமுகவில் முதலியார் சமூகத்திற்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களது சமூகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று பல வருடங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். இப்போது, ஓபிஎஸ் அறிவித்துள்ள செந்தில் முருகன் முதலியார் சாதி சங்கத்தில் உள்ளார். மேலும் இவரது அப்பா பாலகிருஷ்ணன், முதலியார் சாதி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்கிறார்கள். அந்தவகையில், எடப்பாடி அணியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளையும் செந்தில்முருகனால், எளிதில் பெற முடியும் என்றும், இதன்மூலம் எடப்பாடியின் வேட்பாளர் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு நம்புகிறார்களாம்.. ஆக, ஒரே கல்லில் 2 மாங்காயை அடிக்க ஓபிஎஸ் டீம் ரெடியாகி விட்டதாம்..!!

English summary
Do you know who is this Senthil Murugan and O Panneerselvams great plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X