5 லட்சம் பேர் டார்க்கெட்.. திமுக இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றுவது யார் தெரியுமா? கேஎன் நேரு பளீச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த மாதம் (டிசம்பர் 17) ம்தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திமுக இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றுவது யார்? தொடங்கி வைப்பது யார்? என்பது குறித்த முக்கிய விஷயத்தை அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை தி நகர் ஓட்டல் அக்கார்ட்டில் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமை வகித்தார்.

Do you know who will hoist the flag at the Salem DMK State Youth Conference on December 17?

திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் டிசம்பர் 17 ல் சேலத்தில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக சேலம் பெத்த நாயக்கன் பாளையத்தில் டிசம்பர் 17 ல் நடக்கும் திமுக மாநில இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் கேஎன் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சேலத்தில் நடக்கும் திமுக மாநில இளைஞரணி மாநாடு குறித்த முக்கிய விஷயங்களை அவர் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக 2007ல் திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை திருநெல்வேலியில் நடத்தினார். திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இது ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றி வருகிறேன்.

டிசம்பர் 17ம் தேதி காலை 9 மணிக்கு திமுக இளைஞரணி மாநாட்டில் எம்பி கனிமொழி கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு சிபிஎம்பி ஏழிலரசன் மாநாட்டை திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து பிற பேச்சாளர்கள் பேச உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாடு இந்தியாவில் முக்கியமான மாநாடாக அமைய உள்ளது.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் மாநாடாக சேலம் மாநாடு அமைய உள்ளது. 5 லட்சம் கழக தோழர்கள் வருவார்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என ஏற்பாடு செய்துள்ளோம். இது எழுச்சியூட்டும் மாநாடாக அமைய உள்ளது'' என்றார்.

திமுகவின் இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் டிசம்பர் 17ல் பிரமாண்டமாக நடத்ப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக திமுக மாநில இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிள் பேரணியும் நடத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+