Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பல்ப்" வாங்கின பாஜக.. அதைவிடுங்க.. வாசன் "அவரை" சொன்னதுமே.. படக்குனு நிமிர்ந்த மோடி.. யாரு ஸ்டாலினா

பிரதமர் மோடியை சந்தித்து, அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் குறித்து பேசினாராம் தமாகா ஜிகே வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் வந்துள்ள நிலையில், இதை தீர்க்கும் முயற்சியில் முக்கிய தலைவர்கள் இறங்கி உள்ளனர்.. அதில் முக்கியமானவர் தமாகா தலைவர் ஜிகே வாசன்..!!

ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கிவருகிறது பாஜக.. எனினும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வலுத்து வருவதால், தனியாக நின்று தேர்தலை சந்திக்கவும் ரெடியாகி வருகிறது.

அந்தவகையில், 2 மாதங்களுக்கு முன்பு, சில முக்கிய கட்சிகளின் ஆதரவையும் கோரியதாம் பாஜக.. இதுதொடர்பாக நம் ஒன் இந்தியா தமிழில் ஸ்பெஷல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

வாசன்

வாசன்

குறிப்பாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளை பலப்படுத்தி தன்வசம் வைத்துக் கொள்ளவும் முனைப்பு காட்ட துவங்கி உள்ளது.. அந்தந்த கட்சிகளின் தலைவர்களை தொடர்புகொண்ட பாஜக தலைமை, நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்ததாம்.. ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்களோ, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்களாம்.. இந்த நிராகரிப்பு குறித்து பாஜகவின் தேசிய தலைமைக்கு சொல்லப்பட்டுள்ள நிலையில், அதைக்கேட்டு டெல்லி மேலிட தலைவர்களும் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

இதெல்லாம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் என்றாலும், இந்த தலைவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.. ஆனால், அந்த சமயத்தில், வாசனிடம் பாஜக தரப்பு பேசியிருக்கிறது.. பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வந்தாலும், தமாகாவை தனித்தே இயக்கி வருகிறார்.. எனினும், இந்த முறை வாசனிடம், புது டீல் ஒன்றை பேசியதாம் பாஜக. அதன்படி, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று அட்வைஸ் தரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை பாஜக மேலிடம் 3 முறை வைத்தும் மறுத்துவிட்ட வாசன், இந்த முறை சற்று யோசித்தாராம்.. கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னாராம்.

கூல் வாசன்

கூல் வாசன்

அதன்படியே, சமீபத்தில் சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 324 பேரிடமும் இதை பற்றி கருத்து கேட்டிருக்கிறார்.. அவர்களில் 70 சதவீதம் பேர், வாசன் மத்திய அமைச்சராக வேண்டும், அதற்கு கைமாறாக, கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்.. ஆனால், உடனடியாக வாசன் அதற்கு பதிலளித்து, பாஜகவில் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.. எனினும் அதே பேச்சுதான் அடிக்கடி வலம்வருவதும், மீண்டும் அமுங்கிப்போய்விடுவதாக இருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் வந்துள்ளது.. இரு கட்சி நிர்வாகிகளும் வெளிப்படையாகவே மோதிக் கொள்ளும் சூழல் உருவாகிவிட்டது.

தாமரையில் வாசன்

தாமரையில் வாசன்

கொங்கு மண்டல பாஜக - அதிமுக சீனியர்கள் இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முயன்றும், இப்போது வரை அது முடியவில்லை.. எனவே, வாசன் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளதாக தெரிகிறது.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் ஜிகே வாசன்.. தனிப்பட்ட முறையில், பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமானவர் வாசன்.. இதயத்துக்கு நெருக்கமானவரும்கூட.. கடந்த 2019 எம்பி தேர்தலின்போது, அதிமுக - பாஜக இருக்கும் வாசனுக்கு, பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படியே, ராஜ்யசபா எம்பி பதவியை, அதிமுக வழங்கியதாக கூறப்பட்டது.

யுவராஜா

யுவராஜா

இப்போது தமாகா போட்டியிட்ட தொகுதி என்றாலும், எடப்பாடி கேட்டதுமே, ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, தமாகா வேட்பாளர் யுவராஜாவை, தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க, பாஜகவே முயற்சி மேற்கொண்டபோதும் அதற்கு வாசன் உடன்படவில்லை என்பது கவனிக்கவேண்டிய அவசியமாகும்.. இப்போது அதிமுக - பாஜக மோதல்கள் நடந்து வருவதால், இரு கட்சிகளும் இணக்கமாக செல்ல வேண்டும் என்று தன்னுடைய பேட்டிகளில் தவறாமல் குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதன் அடுத்தக்கட்டமாகதான்,பிரதமர் மோடியை சந்தித்து, நேரில் சென்று, சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளார்..

நெருக்கம் இணக்கம்

நெருக்கம் இணக்கம்

தமிழக பாஜக - அதிமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்று வாசனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தாராம்.. அதற்கு வாசன், நடந்து வரும் விவகாரங்களை ஒன்றுவிடாமல் விளக்கி உள்ளதாக தெரிகிறது.. அத்துடன், இந்த மோதலை அப்படியே வளரவிடக்கூடாது, அதை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னாராம்.. அதுமட்டுமல்ல, அதிமுக இல்லாமல், திமுகவை வீழ்த்தவே முடியாது... இந்த முறை தேசிய அரசியலில் ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.. வரும் எம்பி தேர்தலில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், துணை பிரதமராக வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினின் திட்டம்.. அதனால் தான், நாடு முழுதும் வெற்றி பெற முயற்சிப்பதாக பேசி வருகிறார் என்றும் வாசன் பிரதமரிடம் சொன்னாராம்..

வாசன் பொறுமை

வாசன் பொறுமை

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது, அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் எம்பி தேர்தலுக்கு வலுவான கூட்டணி வேண்டும், அதற்கு அதிமுக அவசியம் என்றும் சொன்னாராம் வாசன்... அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மோடி, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் வாசனிடம் விசாரித்தாராம்.. இவ்வளவும் நடந்து முடிந்துள்ள நிலையில்தான், நேற்றைய தினம் அண்ணாமலை பேசியுள்ளது மிகப்பெரிய குழப்பத்தையும் அதிர்ச்சியையும் பாஜகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.

நியூ ஸ்டைல்

நியூ ஸ்டைல்

அண்ணாமலை பேசும்போது, "தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.. நான் தேசிய மேனேஜர் கிடையாது.. கட்சியின் மாநில தலைவர் என்று சொன்னேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்" என்று நேற்று பேசியிருக்கிறார்..

லாஸ்ட் மினிட்

லாஸ்ட் மினிட்

அண்ணாமலையின் இந்த பேச்சால் தமிழக பாஜக தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.. உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அதை சரி செய்தால்தான், அதிமுகவுடனான கூட்டணி சமாச்சாரத்தை சரி செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் தற்போது சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. கூட்டணி விவகாரம் தொடர்பாக அனைத்தையும் சரிசெய்ய வாசன் முயன்றுவரும்போது, கடைசி நேரத்தில் அண்ணாமலை பேசியுள்ளது டெல்லி வரை எதிரொலித்து கொண்டிருக்கிறதாம்.. எல்லாம் விரைவில் சரியாகுமா? வாசனின் முயற்சி "கை" கொடுக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+