ராஜேஸ்வரி பிரியா நறுக்.. ஸ்கூல்ல ஃபார்முலா சொல்லித்தர டீச்சர் இல்லை..இப்ப பார்முலா கார் ரேஸ் தேவையா?
சென்னை: "அரசு பள்ளியில் ஃபார்முலா சொல்லி கொடுக்க ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? என்று ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னையில் இன்றும். நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெறுகிறது. இரவு நேர சர்கியூட் ரேஸிங் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இந்த ரேஸ் நடக்கிறது.

இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்துவதற்கு FIA என்ற தரச்சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும்.. இந்த சான்றிதழை இன்று மதியம் 12 மணிக்குள் வாங்கி சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கார் பந்தயம் நடத்துவதற்கு FIA அனுமதிச் சான்றிதழை வழங்கிவிட்டது.. இறுதிக்கட்ட பாதுகாப்பு சோதனைக்கு பின்னர் 2027 வரை கார் ரேஸ் நடத்த தகுதிச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஃபார்முலா 4 கார் பந்தயமும் ஆரம்பமாகிவிட்டது.
எதிர்ப்புகள்: எனினும், அதிமு, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பந்தயத்துக்கு கடந்த 3 மாத காலமாகவே எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.. அந்தவகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத்தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:
"அரசு பள்ளியில் ஃபார்முலா சொல்லி கொடுக்க ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 9000 பணக்கார ரசிகர்களுக்காக லட்சகணக்கான மக்கள் தமது பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதும் நோயாளிகள் முதியவர்கள் என பல்வேறுதரபட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் சரியா? விளம்பர அரசின் விளம்பரத்திற்கு எல்லையே கிடையாதா?
ஊட்டச்சத்து: அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக இல்லை இன்றளவும் சாலையோரத்தில் மக்கள் படுத்துறங்கும் நிலையை பார்க்கிறோம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் உயிரிழக்கும் குழந்தைகள் என தீர்க்க முடியாத பல அவலங்கள் இருக்கும் நிலையில் கார் பந்தயம் தேவையா இதற்கு செலவிட்ட 40 கோடியை இதில் ஏதேனும் ஒரு மக்கள் பிரச்சினையை தீர்க்க செலவிட்டிருக்கலாம்.
தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கபடுத்தி(ஏழை மாணவ மாணவியருக்கு ஆரோக்கியத்தையும் நல்ல வாழ்வியல் சூழலையும் உருவாக்குவது) உலக அளவிலான போட்டிகளில் பதக்கம் வாங்க வைக்க முயற்சிப்பதே விளையாட்டுத் துறையின் வளர்ச்சி ஆகும். பணக்கார வீட்டு பிள்ளை அமைச்சரானால் பந்தயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கபடும் என்பதனை மக்கள் உணர வேண்டும் என்று கொந்தளித்து கூறியிருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா.
எதிர்ப்புகள்: இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு லோக்சபா தேர்தல் சமயத்தில், சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போதும், சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ராஜேஸ்வரி பிரியா.
"தனியார் நிறுவனம் நடத்தும் IPL கிரிக்கெட் போட்டிக்கு எதற்காக இலவச பேருந்து கொடுக்க வேண்டும்? தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பு விதிமீறல் இல்லையா?ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கு ஏன் இலவச பஸ்? கிரிக்கெட் ரசிகர்களை திருப்திபடுத்த மக்களின் வரிப்பணம் பயன்படுத்தபடுவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
கண்டனம்: தேர்தல் நேரத்தில் யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? 2021 தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 டீசல் ரூ.4 குறைக்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு அதனை நிறைவேற்றினீர்களா? மக்கள் எப்போதும் ஏமாந்தவர்கள்தானா திமுகவினரின் பார்வையில்? என்று காட்டமாக கேட்டிருந்தார். இப்போது அடுத்த ஃபார்முலா ரேஸ் குறித்து கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications