Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்மில் பல பேருக்கும் காலை டிபனில் ‛ஃபேவரைட்'டாக தோசை இருக்கலாம். ஆனாலும் தோசைக்கு ஏன் தோசை என்று பெயர் வந்தது? அதன் வரலாறு? என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தோசை.. ஒரு காலத்தில் பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டில் ஸ்பெஷலாக பரிமாறப்படும் உணவு. இன்று சர்வசாதாரணமாக வீடுகளில் நாம் தோசையை உணவாக சாப்பிட்டு வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் நினைத்த நேரத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தோசையை ருசிக்கிறோம்.

Do you know why Dosa got the name Dosa details here

குறிப்பாக இந்தியாவில் பலபேரின் ‛ஃபேவரைட் ப்ரேக்பாஸ்ட்' என்றால் அது தோசையாக தான் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2024 வரை மொத்தம் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் மூலம் மொத்தம் 29 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) தோசை டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் நிமிடத்துக்கு 122 தோசை ஆன்லைனில் வாங்கப்பட்டுள்ளது.

இது ஸ்விக்கியில் மட்டும் தான். அதேபோல் இன்னும் பல உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. மேலும் பலரும் ஹோட்டல் மற்றும் வீடுகளில் தோசையை காலை உணவாக எடுத்து கொள்கின்றனர். அப்படியென்றால் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் இந்தியாவில் எத்தனை பேருக்கு தோசை ‛ஃபேவரைட்' உணவு என்று. இது இந்தியாவில் மட்டுமல்ல. பிற நாடுகளுக்கும் பொருந்தும். தற்போது தோசை என்பது தோசா (DOSA) என்ற பெயரில் வெளிநாட்டினரும் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் இணைந்துள்ளது.

இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி ‛உலக தோசை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 3ம் தேதி ‛உலக தோசை தினம்' கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் மட்டும் 100க்கும் அதிக வகையிலான தோசைகள் பயன்பாட்டில் உள்ளது. சாதா தோசை, நெய் தோசை, மசாலா தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை, செட் தோசை, வெண்ணெய் தோசை, பேப்பர் ரோஸ்ட், தக்காளி ரோஸ்ட், கறி தோசை, ரவா தோசை, நெய் ரவா ரோஸ்ட் என நாம் தோசையின் வகைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி இந்தியா முதல் வெளிநாடு வரை காலை உணவாக உள்ள தோசைக்கு பின்னணியில் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அதாவது தென்னிந்திய உணவாக அடையாளம் காணப்படும் தோசைக்கு சொந்தம் கொண்டாடுவது என்னவோ தமிழ்நாடும், கர்நாடகாவும் தான். ஒரு தரப்பினர் தோசை தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என கூறும் அதேவேளையில் இன்னொரு தரப்போ தோசை கர்நாடகாவில் தான் பிறந்தது என உரிமை கொண்டாடுகின்றனர். திடீரென்று இதுதொடர்பான வாதங்கள் இணையதளங்களில் கூட டிரெண்ட் ஆவது உண்டு.

இதுதொடர்பாக உணவு குறித்த ஆராய்ச்சியாளர் பி தங்கப்பன் நாயர், ‛‛தோசை கர்நாடகாவின் உடுப்பில் தான் பிறந்தது. CE 1126ம் ஆண்டில் கர்நாடகாவை ஆட்சி செய்த சாளுக்கியா அரசர் 3ம் சோமேஸ்வரா எழுதிய மனேசோலாசா (Manasollasa) என்ற சமஸ்கிருத என்சைக்லோபீடியாவில் தோசை என்பது ‛தோசகா' Dosaka என்ற வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் இந்தியாவின் பிற இடங்களுக்கு தோசை என்பது பரவ தொடங்கியது'' என்கிறாம். அதேவேளையில் முதலாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் தோசை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரி இது இருக்கட்டும். இனி தோசைக்கு ஏன் தோசை என்று பெயர் வந்தது? என்பதை பார்ப்போம். தோசைக்கு, தோசை என பெயர் வந்தததன் பின்னணியில் பல கட்டுக்கதைகள் வலைதளங்களில் உள்ளன. அதில் ஒன்று மிகவும் வேடிக்கையானது. அதாவது, தோசைக்கல்லில் மாவை ஊற்றும்போது ‛சை' என்ற சத்தம் வரும். அதேபோல் தோசையை திருப்பி போடும்போதும் மீண்டும் ‛சை' என்ற சத்தம் வரும். இப்படி 2 முறை ‛சை' என்ற சத்தம் வருவதால் ‛தோசை' (தோ என்பது ஹிந்தியில் நம்பர் 2யை குறிக்கும்) என்கின்றனர் என்ற கட்டுக்கதை இன்றும் கூட இணையதளத்தில் உலா வருவதை நம்மால் காண முடியும்.

ஆனால் உண்மை காரணம் என்பது வேறு. அதனை பல தமிழ் மொழி அறிஞர்கள் விளக்கி உள்ளனர். குறிப்பாக சொல்லாராட்சியின் வல்லுனர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தோசையின் பெயர் காரணத்தை கூறியுள்ளார். தமிழ் மொழியை எளிமைப்படுத்தியதில் இவருக்கு சிறந்த பங்கு உள்ளது. இந்நிலையில் தான் தேவநேயப் பாவாணர் தோசை பற்றியும் பேசியுள்ளார்.

அதாவது தோய் + செய் = தோய்செய் என்பது தான் காலப்போக்கில் மருவி தோசை என்றாகிவிட்டது என்கிறார் அவர். ஏனென்றால் ‛தோய்' என்றால் புளித்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி தேய்த்து எடுப்பதை குறிக்கும். இப்படி தோய்த்து செய்யும் இந்த உணவு என்பதால் தோய் + செய் என்பது மருவி காலப்போக்கில் தோசை என்றாகிவிட்டதாக அவர் விளக்குகிறார். இப்போது தோசை பெயர் காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும். இனி தோசை சாப்பிடும்போது அதற்கான பெயர் காரணத்தை நினைவில் வைத்தே ரசித்து ருசியுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+