5 ரன்னுக்கு 5 விக்கெட்! மும்பை வீரர் ஆகாஷ் மத்வாலின் மறுபக்கம்! உள்ளூர் போட்டியில் விளையாட தடை ஏன்?
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியில் விளையாடிய ஆகாஷ் மத்வால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்த நிலையில் அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஐபிஎல்.. இந்தியாவில் ஆண்டுதோறும் 2 மாதங்கள் நடக்கும் கிரிக்கெட் திருவிழா. சர்வதேச போட்டிகளில் எதிரும், புதிருமாக விளையாடி வீரர்கள் அனைவரும் ஓரணியில் விளையாடுவது ஐபிஎல்லின் சிறப்பாக உள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீசனிலும் பல திறமையான வீரர்களை இந்திய அணிக்கு அடையாளம் காட்டும் போட்டியாகவும் ஐபிஎல் இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் மூலம் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் மத்வால் உள்ளிட்டவர்கள் அதிக கவனம் பெற்றனர். லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 பாலுக்கு 5 சிக்சர் அடித்து கொல்கத்தாவை வெற்றி பெற வைத்து ரிங்கு சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஆகாஷ் மத்வால் தனது அற்புதமான பந்துவீச்சால் இந்த சீசனில் அதிக கவனம் ஈர்த்தார். குறிப்பாக லக்னோ அணிக்கு எதிராக நடந்த எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரே நாளில் ஹீரோவானார். அதோடு அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற மிகப்பெரிய அளவில் பங்காற்றினார்.
ஆகாஷ் மத்வால் முதலில் ஆர்சிபி அணியிலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலும் நெட் பவுலராக இருந்தார். அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலமெடுத்து இந்த முறை முதல் முதலாக வாய்ப்பு வழங்கியது. மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய ஆகாஷ் மத்வால் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது சிறந்த செயல்பாடு என்பது லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது தான்.
இப்படி ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆகாஷ் மத்வால் பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் மத்வால் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தார். குறிப்பாக வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்தினார்.
தனக்கு விருப்பப்பட்ட விளையாட்டை அதிக ஆர்வத்துடன் விளையாடியதால் தான் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இருந்தது. இதனால் அவரை எதிர்கொள்ள லோக்கல் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயந்துள்ளனர். இதனால் ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூர் டென்னிஸ் பந்து தொடரில் இருந்தே விளையாட அனுமதிக்கப்படவில்லையாம்.
இதுபற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், ‛‛ஆகாஷ் மத்வால் உள்ளூர் டென்னிஸ் பந்து போட்டிகளில் விளையாடினார். இப்படி விளையாட அவருக்கு பணம் வழங்கினார்கள். டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். நல்ல வேகம், துல்லியமான பந்துவீச்சு உள்ளிட்டவை ஆகாஷ் மத்வாலை கண்டு பேட்ஸ்மேன்களை அலறவைத்தது. இதனால் ஆகாஷ் மத்வால் பிரபலமானார். மேலும் ஆகாஷ் மத்வாலை எதிர்த்து விளையாடுவது கஷ்டம் என எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் நினைத்தனர். இதனால் இந்த சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எந்தவொரு டென்னிஸ் பந்து தொடரிலும் அவரை யாரும் விளையாட அனுமதிப்பதில்லை. அங்கிருந்து முன்னேறி தற்போது ஆகாஷ் மத்வால் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications