Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது முறை பிரதமர் பதவியை ஏற்க ஜூன் 8ம் தேதியை.. மோடி தேர்வு செய்தது ஏன் தெரியுமா? முக்கிய காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 8-ந் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி 8ம் தேதியை தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

இன்று டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராகிறார் மோடி.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress

கூட்டணி ஆட்சி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

8ம் தேதி ஏன்?: ஜூன் 8-ந் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி 8ம் தேதியை தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

பிரதமர் மோடி 17-09-1950 இல் பிறந்தார், அவரின் பிறப்பு எண்.8,{1+7=8}.. மொத்தமாக அவரின் பிறப்பு நாளின் கூட்டு தொகை 5. {1+7+9+1+9+5=35=5}. எண் கணிதம்படி அவருக்கு நல்ல எண்கள் என்று ஜோசியர்கள் கூறுவது 8, 1, 3, 5 & 6.

எண் 8 போலவே, அவரது வாழ்க்கை எப்போதும் தீவிரமானது. எப்போதும் extreme எல்லையில் இருக்க கூடியது. 8 மிகவும் கவர்ச்சிகரமான எண். இது பலரால் அஞ்சப்படுகிறது, சிலரால் விரும்பப்படுகிறது. அவர் இது தனக்கு ராசியான எண் என்று தீவிரமாக நம்புகிறார்.

2014ல் மோடி மே 26ம் தேதி பதவி ஏற்றார். இதன் கூட்டு தொகை 8. இந்த நிலையில் மீண்டும் 8ஐ மனதில் வைத்து மோடி பதவி ஏற்க உள்ளார்.

உதவி தேவை; சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+